Gallery - 2016
26-07-2016
தமிழ்நாடு சட்டமன்றத்தில் காஞ்சிபுரம் தொகுதியில் இயங்கி வந்த நோக்கியா மற்றும் பாக்ஸ்கான் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பல ஆயிரம் இளைஞர்கள் வேலை இழந்துள்ளதை பற்றியும், அதை அரசு ஏன் தடுக்கவில்லை எனவும், உடனடியாக தொழிற்சாலையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தேன். காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்தும், பாலாற்றின் தடுப்பணை கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது குறித்தும், பேரறிஞர் அண்ணா பட்டு பூங்கா திட்டத்தை முடக்கியது குறித்தும் கேள்விகளை முன் வைத்தேன்
.
20-07-2016
காஞ்சிபுரம் மாவட்டம், விஷார் ஊராட்சி ஒன்றியம், விஷார் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டு மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்
.
.
.
16-07-2016
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தின் அருகிலுள்ள நெசவாளியின் வீடு தீப்பிடித்து எறிந்த செய்தி அறிந்து, அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நெசவாளருக்கு ஆறுதல் கூறி உரிய நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்தேன்
.
.
.
15-07-2016
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தேன்
.
12-07-2016
வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்
.
08-07-2016
காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட, பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன். மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் பள்ளிக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தேன்