Gallery - 2016
15-09-2016
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துக் கொண்டு என் ஆலோசனையை வழங்கினேன்.
அதன்பிறகு காஞ்சிபுரம் வட்டம், புதுபாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் கலந்துக்கொண்டு மக்களிடமிருந்து குறை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்
.
.
.
.
10-09-2016
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட 47-வது வார்டில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு துற்நாற்றம் வீசுவதாக பொது மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டதையடுத்து நான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தேன்
.
09-09-2016
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்.
.
.
.
08-09-2016
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டேன். அதில், விளையாட்டு வீரர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பது தெரிய வந்தது. எனவே விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்துவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தேன்
.
.
03-09-2016
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்