Gallery - 2016
28-10-2016
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் ஊராட்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன். பின் ஊராட்சி மக்களிடம் குறை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்
.
.
26-10-2016
காஞ்சிபுரம் மாவட்டம், 56, களியனூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி முகாமில் கலந்து கொண்டு மக்களின் பல்வேறு கோரிக்கைகளை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்.
.
.
24-10-2016
காஞ்சிபுரம் மாவட்டம், வெங்கடாபுரம் பகுதியின், நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் உள்ளனா என மாணவர்களிடம் கேட்டறிந்தேன்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட 48, 49, 50-ம் வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை என்ற புகாரின் பேரின் ஆய்வு மேற்கொண்டேன். இனி இதுபோன்ற தவறுகள் நடக்க கூடாது என்று விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கினேன்.
காஞ்சிபுரம் மாவட்டம், முசரவாக்கம் கிராமத்திற்கு சென்று கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்.
காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டேன்.
.
.
.
.
21-10-2016
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சிறுவள்ளூர் கிராமத்தை நேரில் சென்று ஆய்வு செய்து, பொது மக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்.
.
.
.
20-10-2016
காஞ்சிபுரம் நகரத்தில் ஏழை, எளியோருக்காக கட்டப்பட்ட அன்னை அஞ்சுகம் திருமண மண்டத்தை சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதை அறிந்து நேரில் சென்று ஆய்வு செய்து, அவற்றை சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். பின் காஞ்சிபுரம் நகரத்திலுள்ள மின் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன்
.
.
18-10-2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் இரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கலந்துக் கொண்டேன். அதற்காக கைது செய்யப்பட்டு சிறை சென்றேன்
.
.
14-10-2016
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் கலந்துக் கொண்டு மக்களிடமிருந்து குறை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்.
பின் காஞ்சிபுரம் நகரம் புத்தேரி தெருவில் பொதுமக்கள் பாதாள சாக்கடை அடைப்பால் பாதிப்புக்குள்ளாகும் செய்தி அறிந்து நேரில் சென்று ஆய்வு செய்து உடனே சரிசெய்ய உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்
.
.
.
13-10-2016
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள 16, 30வது வட்டங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை வீதி வீதியாக நடந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டேன். மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்