Gallery - 2016
26-11-2016
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற இந்திய உறுப்பு தான வாரம் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன்
.
.
25-11-2016
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், வேளியூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு மக்களிடமிருந்து குறை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்
.
.
24-11-2016
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மத்திய அரசை கண்டித்தும் மற்றும் அதிமுக அரசை கண்டித்தும், நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்பட்டுள்ள இன்னல்களை நீக்க, உடனடியாக மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரி நடைபெற்ற மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துக் கொண்டேன்
.
23-11-2016
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி ஊராட்சியில் உள்ள மேல்நிலை பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டேன். பின் பாலுச்செட்டி சத்திரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சமுதாய சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டேன்.
அதன்பிறகு பழமை வாய்ந்த திருப்புட்குழி ஸ்ரீ விஜய ராகவஸ்வாமி தேவஸ்தான கோவில் பராமரிப்பு பற்றி கேட்டறிந்தேன்
.
.
.
.
05-11-2016
புதியதாக பொறுப்பேற்றுள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார் IAS அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, காஞ்சிபுரம் தொகுதியின் தேவைகள் குறித்து ஆலோசனை செய்தேன். உடன் காஞ்சிபுரம் மாவட்ட அவைத்தலைவர் திரு சி.வி.எம்.அ. சேகரன், நகர செயலாளர் திரு. சன்பிரான்டு கே. ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் திரு பி.எம். குமார், வெங்கடேசன், எம்.எஸ். பாலன், சசிகுமார் ஆகியோர் இருந்தனர்.
1. தாமல் ஏரிக்கு நீர்வரத்து கால்வாயை சரி செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன்.
2. சிறு காவேரிப்பாக்கம் கருப்படை தட்டடை வழியாக பொன்னேரிக்கு செல்லும் கால்வாயை தூர்வாரும்படி கேட்டுக்கொண்டேன்.
3.மாவட்ட விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் வாக்கிங் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
4.மேல்கதிர்பூர் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
மேலும் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான பல கோரிக்கைகளை முன்வைத்தேன்