Gallery - 2017
29-11-2017
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகரத்திலுள்ள அரசு க.மு.சு. மேல்நிலைப் பள்ளியில் நவீன கழிப்பறை கட்ட வேண்டும் என்று வந்த கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, நிதியை ஒதுக்கி கழிப்பறை கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினேன்
.
.
27-11-2017
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகரம், 30-வது வட்டத்தில் இயங்கி வரும் அரிசி ஆலை சாம்பலால், அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாண்மையான நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாக அறிந்து, உடனே நேரில் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகுந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்.
.
.
.
.
25-11-2017
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17-வது தென்னிந்திய யோகா போட்டியின் நிகழ்ச்சி, ஜெயேந்திரர் சரஸ்வதி யோகாசன மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினேன்
.
.
24-11-2017
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்று நோய் மருத்துவமனையில் புதிதாக கட்ட உள்ள மருந்து சேமிப்பு கிடங்கு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.
.
.
.
23-11-2017
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்புட்குழி ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணிகள் சரிவர நடக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டேன்
.
.
22-11-2017
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகரம், 51-வது வார்டில் உள்ள நியாய விலை கடை முன்பு, சர்க்கரை விலை ஏற்றத்தினை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடந்தது அதில் கலந்து கொண்டு என் ஆதரவை தெரிவித்தேன். பின் காஞ்சிபுரம் நகரத்திலுள்ள 39-வது வட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்து, மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க பரிந்துரை செய்தேன்
.
.
.
.
21-11-2017
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம், தாமல் கிராமத்திற்குட்பட்ட பள்ளியில் ஆய்வுக்கு செல்லும் போது, மக்கள் ரேஷன் கடை முன்பு 10.20 மணி வரையில் காத்திருந்ததை அறிந்து வட்ட வழங்கல் அதிகாரியை தொடர்பு கொண்டு கடையை உடனே திறக்கவும், சம்பந்த பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டேன்
.
.
17-11-2017
காஞ்சிபுரம் மாவட்டம், விப்பேடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்டு, மக்களின் குறை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன். பின் விப்பேடு ஊராட்சியின் ஆர்.சி.எம். நகராட்சி தொடக்க பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன்.
.
.
.
.
12-11-2017
சென்னையில் உள்ள SBOA பள்ளியில், நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல் எனும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு மாணவர்களின் நலன் காக்கும் ஆலோசனைகளை வழங்கினேன்
.
.
10-11-2017
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு மக்களிடமிருந்து குறை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன். பின் காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் மற்றும் சின்ன காஞ்சிபுரம் மார்க்கெட் பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் குத்தகைதாரர்களின் வாடகை உயர்த்தப்பட்டிருப்பதை கேள்விப்பட்டு நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து உயர்த்தப்பட்ட தொகையை குறைக்கக்கோரி பரிந்துரை செய்தேன்
.
.
.
.
09-11-2017
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் கலந்துக் கொண்டு மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்
.
.
.
08-11-2017
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மழையால் சேதமடைந்த சாலைகளை சீர்செய்யும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து விரைந்து பணிகளை முடிக்க பரிந்துரைத்தேன்
.
.
07-11-2017
காஞ்சிபுரம் மாவட்டம், கோனேரிகுப்பம் பஞ்சாயத்தில் உள்ள பகுதியில், மழைநீர் தேங்கி நிற்பதாக மக்களிடமிருந்து வந்த தகவலையடுத்து, அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்