Gallery - 2020
21-02-2020
காஞ்சிபுரம் தொகுதியில் காஞ்சிபுரம் ஒன்றியம், வாலாஜாபாத் ஒன்றியத்தில், OHT மற்றும் சாலை வசதிகள் வேண்டும் என கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கடிதம் கொடுத்தேன்
.
.
19-02-2020
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் படித்த இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு என அனைத்து தரபினருக்கும் பயன்பெரும் வகையில் தொழிற்பேட்டை அமைத்து, சாமானியர்களின் வாழ்வை மேம்படுத்தும்படி சட்டமன்றத்தில் என் கோரிக்கையை எடுத்துரைத்தேன். மேலும், காஞ்சிபுரத்தில் பொருளாதார மண்டலம் அமைக்க வலியுறுத்தினேன்.
.
.
16-02-2020
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பிள்ளையார் பாளையம், சேர்மன் சாமிநாத முதலியார் பள்ளியில், சுகாதார திருவிழா நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி, மிதிவண்டி மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகம் முதலியவற்றை வழங்கினேன்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கோனேரிகுப்பம் ஊராட்சியில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 13,80,000 ஓதுக்கீடு செய்து 4 மாதத்தில் கட்டிடத்தை கட்டி முடித்து நியாய விலை கடையை திறத்து வைத்தேன்.
காஞ்சிபுரம் தொகுதியில் மூச்சு திணறலால் இறந்த கல்லூரி மாணவன் கனேஷ்குமார் இல்லம் சென்று மகனை இழந்த பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினேன்
.
.
15-02-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரத்தில், டாக்டர் பி.எஸ். சீனிவாசன் மேனிலைப்பள்ளி, ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் ஓன்றியத்திற்குட்பட்ட தாமல், திருப்புக்குழி, முசரவாக்கம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தவாடி, புள்ளலூர், பரந்தூர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட 9 அரசு மேனிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினேன்
காஞ்சிபுரம் கா.மு. சுப்புராயன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினேன். அதன்பிறகு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான புதிய கழிப்பறை கட்டிடம் கட்டி அதை திறந்து வைத்தேன்.
காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கி, சிறப்புரையாற்றிய பிறகு என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய்.4,25,000 மதிப்பிலான மேசை, நாற்காலி 60 ஜோடி வழங்கினேன்
.
.
.
.
13-02-2020
காஞ்சிபுரம் தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து, ஆலோசனை கூட்டம் நடத்த 10.02.2020 அன்று அனைவரும் கலந்துக்கொள்ள பொது அறிவிப்பு விடுத்தேன். அந்த கூட்டம் 13.02.2020 அன்று நடந்தது. அதில் காஞ்சிபுரத்தை சார்ந்த பொது மக்கள், அனைத்து கட்சிகள் நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள் கலந்துக்கொண்டு அவர்கள் கருத்தையும் தெரிவித்தார்கள். அந்த கூட்டத்தில் காஞ்சிபுரத்தின் வளர்ச்சி குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
.
.
.
11-02-2020
காஞ்சிபுரம் பேருந்து நிலைய கடை ஒப்பந்ததாரர்களின் கோரிக்கை நிறைவேற்றபட்டதை தொடர்ந்து அவர்கள் என்னை சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு சென்றனர்