Gallery - 2020
31-03-2020
காஞ்சிபுரம் தொகுதியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு முன்பணமாக ரூ.5000/- வழங்க வேண்டும் மற்றும் உற்பத்தி பொருளை வரவு செய்து கூலி வழங்குவது குறித்தும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை, துணை இயக்குநருக்கு கடிதம் எழுதினேன்
.
.
30-03-2020
காஞ்சிபுரத்திலிருந்து சற்றொப்ப 500 ஊழியர்கள் தலைமை செயலகத்தில் பணி புரிவதால் இந்த ஊரடங்கு காலத்தில் அவர்கள் பணிக்கு சென்று வர மிகவும் சிரமமான சூழ்நிலை நிலவுவதாக எனக்கு வந்த தகவலையடுத்து, அவர்களுக்கு தனி பேருந்து இயக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கும், தமிழக தலைமை செயலருக்கும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் மின்னஞ்சல் வழியாக கடிதம் எழுதினேன்.
.
.
.
.
29-03-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்ட மக்களுக்கு இந்த கொரோனா காலத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை குறைகளை சொல்லுங்கள் பின்தொடர்கிறேன் எனும் ஒரு திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம் தொகுதி மக்களின் குறைகளை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்ப சொல்லி கோரிக்கை வைத்தேன்
.
.
26-03-2020
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க மருத்துவ கருவிகள், கிருமி நாசினிகள், கையுறைகள், முககவசங்கள், செயற்றை சுவாச கருவிகள் குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு வாங்குவதற்காக 2019-2020 ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10,00,000 மற்றும் எனது ஒரு மாத ஊதியம் ரூபாய் 1,05,000 தொகையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்
.
.
23-03-2020
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க சுகாதார கருவிகள் வாங்குவதற்காக 2019-2020 ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10,00,000 தொகையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன். மேலும் உலகையே அச்சுறுத்தும் கொரோன நோய் மக்களை பெரும் சிரமத்திற்கும், மன மற்றும் உடல் ஊலைச்சலிலும், துயரத்திலும் ஆழ்த்தியிருக்கும் நிலையில் காஞ்சிபுரம் தொகுதி மக்களுக்கு அரசு எடுக்கும் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு தேவைப்படும் மருத்துவ கருவிகள், செயற்கை சுவாக கருவிகள், முக கவசம், கையுறை, கிருமி நாசினிகள் மற்றும் மருத்துவத் தேவைக்கு தேவைப்படும் மருத்துவப் பொருட்கள் வாங்கிட, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரைசெய்தேன்.
.
.
.
.
22-03-2020
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது இந்த அரசு. ஆனால் அதை அறிவிக்கும் முன்பு அன்றாடங்காய்ச்சிகளும், தினக்கூலிகளும் தினமும் சோற்றுக்கே கஷ்டப்படுவார்கள் என்ற கவலை சிறிதுகூட இன்றி, எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எந்த முன்னேற்பாடுகளும் இன்றி இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. காஞ்சிபுரம் சிறு, குறு வியாபாரிகள் நிறைந்த மாவட்டம். இங்கு பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தினரே வசித்து வருகிறார்கள். இச்சூழலில் இப்படிப் பட்ட ஊரடங்கு உத்தரவு என் மாவட்ட மக்களை பசியில் கொன்று விடும். வியாபாரிகள் படு நட்டத்தில் தள்ளப்படுவார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பே முறிந்து விடும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசை கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உடனடியாக அனைத்து வீடுகளிலும் ரேசன் பொருட்கள் 50% கூடுதலாக சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களின் வாடகைப் பணத்தை அரசு நிர்வாகமே தருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
மின்சாரம் மற்றும் தண்ணீர்க் கட்டணம் உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும். தெருக்களிலும், ஊர்களிலும் ஆங்காங்கே மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்படவேண்டும்.
அனைவருக்கும் வேலை இழப்புத் தொகையாக குறிப்பிட்ட தொகை ஒரு மாத காலத்திற்கு அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு கோரிக்கைகளை அரசிடம் வைத்தேன்.
.
.
20-03-2020
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காஞ்சிபுரம் மக்களின் பல்வேறு கோரிக்கைகளாக பேருந்து நிலையம் அமைத்தல், அனைத்து துறை சார் அலுவலகங்கள், வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தை காஞ்சிபுரம் மக்களுக்கு வழங்க வேண்டும் மற்றும் காஞ்சிபுரம் தொகுதிக்கு முதன்மை நீதிமன்றம் அமைப்பது குறித்தும் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன்
.
.
.
14-03-2020
காஞ்சிபுரம் பச்சையப்பன் கிளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என்னை சந்தித்து பள்ளிக்கு கூடுதல் கட்டடம் மற்றும் கழிவறை கட்டடம் கட்டுவது போன்ற கோரிக்கைகள் கொண்ட மனு அளித்தனர். நானும் முடிந்தவரை இயன்றதை செய்கிறேன் என உறுதியளித்தேன்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயம் முன்பு, சாலையோர கடை நடத்துபவர்கள் அவர்களது கோரிக்கைகளை மனுவாக என்னிடம் அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தேன்
காஞ்சிபுரம், அம்பி ஊராட்சியின் பொதுமக்கள் சார்பில், தி.மு.க நிர்வாகிகள் என்னை சந்தித்து 40-ற்கும் மேற்பட்டோருக்கு பட்டா வேண்டி மனு அளித்தனர். நானும் அவற்றை பார்த்து உடனடியாக வட்டாட்சியரை தொடர்பு கொண்டு மனுக்களை விசாரித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தேன்.
.
.
.
.
07-03-2020
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சரியாக குடிநீர் கிடைப்பதில்லை என்ற வந்த செய்தியை தொடர்ந்து ஆய்வுக்கு சென்றிருந்தேன். பின் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டிகளை வழங்கினேன்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் புதியதாக 5 வழித்தடங்களில் செல்ல இருக்கும் பேருந்துகளின் பயணத்தை துவக்கி வைத்தேன்
.
.
.
.
06-03-2020
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் கட்டடம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.51.45 லட்சம் ஒதுக்கி கட்டிடம் கட்டப்பட்டு அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்
காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள கிராமங்களில் புதிய நோய் பரவி வருவதாக வந்த தகவலை அடுத்து, கால்நடை மருத்துவ உதவி இயக்குநரை நேரில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தி, கிராமங்களில் அதுசம்பந்தமாக விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்திட அறிவுறுத்தினேன்