Kancheepuram www.kanchimlaezhil.com

Gallery

Gallery - 2020

30-04-2020

காஞ்சிபுரத்தில் நீண்ட நாட்களாக இரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து முடிந்த நிலையில், இரயில் பாதை அருகில் உள்ள இடத்தில் மட்டும் பணி முடிக்காமல் உள்ளது. பாலம் கட்டும் பணியை உடனடியாக துவக்க வேண்டும் என்று ரயில்வே பொதுமேலாளர் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்

Christmas Wishes

.

Christmas Wishes

.

29-04-2020

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வந்து செல்லும் வாகனங்களை, தொகுதியின் எல்லையில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்திய பின்னர் அனுமதிக்குமாறும், காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள நகராட்சி மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள தெருக்கள் முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கிருமி நீக்கம் செய்ய வேண்டுமென்றும், அனைத்து தெருக்களிலும் கிருமி நீக்கம் செய்வதில், அதிநவீன கிருமிநாசினி தெளிப்பான் கருவிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும், கொரானாவால் பெருமளவில் பாதிக்கப்பட்ட மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்களால், காஞ்சிபுரத்திலும் கொரானா பரவுவதற்கு பெரும் வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக வெளி மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்து நமது காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள் நுழையும் வாகனங்கள் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, (கொரானா தொற்றுக்கு வாய்ப்புள்ள இடங்களை முழுமையாக சுத்தப்படுத்திய பிறகு) கிருமி நீக்கம் செய்தபின்பாக வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவேண்டும். மேலும், கொரானா தடுப்பில் முன்னணி வரிசையில் நின்று சேவையாற்றும் காவலர்கள், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துகிறார்களா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். மேற்படி உபகரணங்களும் தங்குதடையின்றி கிடைக்க உறுதி செய்யப்பட வேண்டும். மேற்சொன்ன நபர்கள் அனைவருக்கும் கொரானா பரிசோதனை நடைபெறுவதும் உறுதி செய்யப்படவேண்டும். மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்ட மூலிகை மருந்துகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படவேண்டும். அதுமட்டுமன்றி, காஞ்சிபுரம் தொகுதியின் நகரம் மற்றும் அனைத்து ஊராட்சிகளில் உள்ள தெருக்கள் முழுவதிலும் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். மேற்சொன்ன அனைத்து வேலைகளையும் உடனடியாகச் செய்து காஞ்சிபுரத்தை கொரானா பாதிப்பு இல்லாத தொகுதியாக மாற்ற மாவட்ட ஆட்சியருக்கு இன்று கடிதம் எழுதினேன்.

Christmas Wishes

.

Christmas Wishes

.

Christmas Wishes

.

22-04-2020

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம், காஞ்சிபுரம் நகர மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக படும் கஷ்டங்கள் குறித்தும், மருத்துவர்கள், நெசவாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் 1 மணிக்கு மேல் பணி முடிந்து வீடு திரும்பும் அரசு அலுவலர்கள், மக்கள் அச்சம் இல்லாமல் வெளியே சென்று வரவும் தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். மாவட்ட ஆட்சியர் அவர்கள் என்னுடைய கோரிக்கைகள் அனைத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Christmas Wishes

.

Christmas Wishes

.

Christmas Wishes

.

Christmas Wishes

.

19-04-2020

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில், கொரோனா கால கட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரியும், மின் கணக்கீட்டை இரண்டு மாதங்களுக்கு பதில், மாதாமாதம் எடுக்க வேண்டும் என்று முதன்மை செயலாளர்க்கு கடிதம் எழுதினேன்

Christmas Wishes

.

Christmas Wishes

.

18-04-2020

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பிள்ளையார் பாளையம், 12 வார்டு பகுதியில் இருக்கும் மக்களுக்கு அரிசி, மாஸ்க், சானிடைசர் முதலிய பொருட்களை வழங்கினேன். அதன்பிறகு காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் சன்னதி தெரு, நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பொருள்களும் மக்களுக்கு சரியாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தேன். காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பாண்டவ பெருமாள் கோவில் தெரு, நியாயவிலை கடையில் பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அரிசி, மளிகை பொருட்கள் முறையாக அனைவருக்கும் வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தேன் காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் சாலையில் உள்ள துப்புரவு பணியாளர்கள், லாரியில் சென்றவர்கள், சாலையில் உள்ள வயதான முதியவர்கள் ஆகியோருக்கு மதிய உணவு மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கினேன்

Christmas Wishes

.

Christmas Wishes

.

Christmas Wishes

.

Christmas Wishes

.

17-04-2020

கொரோனா வேகமாக பரவி வரும் காலத்தில், முறையான வழிகாட்டுதல்கள் இன்றி ஒரு சில நிறுவனங்கள் இயங்கலாம் என்ற அறிவிப்பால் காஞ்சிபுரத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படும். எனவே இது குறித்து மறுஆய்வு செய்யக்கோரி தலைமை செயலாருக்கும், முதன்மை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை, கூடுதல் தலைமை செயலாளர், தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்.

Christmas Wishes

.

Christmas Wishes

.

Christmas Wishes

.

10-04-2020

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, தாமல் கிராமத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மூட்டை களத்தில் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்ததை கருத்தில் கொண்டு மறுதினமே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை (06.04.2020) அன்று நேரில் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தியதன் பேரில் அவர்கள் உடனே அத்துறையின் உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்திரவிட்டதின் பேரில் (08.04.2020) அன்று நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் தாமல் கிராமத்திற்கு வருகை தந்து கொள்முதல் செய்தனர் காஞ்சிபுரம் நகராட்சியில் கோரோனா பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் 510 நபர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள், அரிசி, துவரம்பருப்பு, சோப்பு, கிருமி நாசினி, கையுறை, கபசுர குடிநீர், முகக் கவசம் போன்ற 7 பொருட்கள் ரூபாய் 2.25 லட்சம் மதிப்பில் வழங்கினேன். உடன் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர் ஆகியோர் இருந்தனர்.

Christmas Wishes

.

Christmas Wishes

.

Christmas Wishes

.

Christmas Wishes

.

07-04-2020

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, காஞ்சிபுரம் தொகுதியைச் சார்ந்த நகரத்தின் வட்டங்களில் மற்றும் ஊர்களில் அறியப்பட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்து சென்றேன். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரானா தடுப்பு சிகிச்சைக்காக தேவைப்படும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்த கடிதத்தை வழங்கினேன். நடைபெற்று வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதித்தேன். இக்கட்டான இச்சூழலில், மாவட்ட நிர்வாகத்தின் பணி, பாராட்டப்படத்தக்க வகையில் இருப்பதை நன்றியுடன் ஆட்சியரிடம் பகிர்ந்து கொண்டாலும்; குறிப்பாக, இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பெரும் பங்காற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு மற்றும் உதவிகள் குறித்தும், நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு முறையில் விரைவாக வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும், காஞ்சிபுரம் நகரத்தில், நகராட்சி நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் தூய்மை பணிகளும் பாராட்டத்தக்கது. மேலும், தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் உதவிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மைப்பணியை இன்னும் செம்மையாக செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், அத்தியாவசியப் பொருட்கள் தாமதமின்றியும், தட்டுப்பாடின்றியும் கிடைக்க வேண்டியதையும், காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட கிளார், திருப்புட்குழி, தாமல், கீழம்பி, விஷார், கீழ்கதிர்பூர், மேல்கதிர்பூர், கோனேரிகுப்பம், ஈஞ்சம்பாக்கம், புதுப்பாக்கம், கோவிந்தவாடி, புரிசை, கம்மவார்பாளையம், 144 தண்டலம், அத்திவாக்கம் ஆகிய ஊர்களில் வசிக்கும் இருளர்/பழங்குடியினர், அதே போல, கீழம்பி, அத்திவாக்கம் ஆகிய ஊர்களில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் ரேசன் அட்டை இல்லாத மக்களுக்கு அரசு தரக்கூடிய உதவிகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்க வேண்டியது குறித்தும், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல், அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூலமாக விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுபாட்டில் உள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அரசு அறிவித்துள்ள காலை 6மணி முதல் பகல் 1 மணி வரை செல்வோரிடம் கெடுபிடி இல்லாமல், முறைப்படுத்தி அனுப்ப காவல்துறை நண்பர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும், மேற்சொன்ன விவரங்களை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன். அவரும் பொறுமையாகக் கேட்டு அவற்றின் மீது தக்க நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார். குறிப்பாக காஞ்சிபுரம் நகரத்தில் Containment Zone என்பதற்குள்ளாக கொண்டுவரப்பட்டுள்ள ஒன்பது வார்டுகளில், பொது மக்கள் நடைமுறை வாழ்க்கையில் சந்தித்து வரும் இன்னல்களைப் போக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கு மாவட்ட ஆட்சியர் "அப்பகுதியில் மக்கள் வெளியே வரக்கூடாது எனவும், அவர்களுக்கு வேண்டிய காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அப்பகுதியில் உள்ள கடைகளில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்தார்.

Christmas Wishes

.

Christmas Wishes

.

06-04-2020

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புட்குழி, பரந்தூர், பெரும்பாக்கம், கூரம் ஆகிய நான்கு ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரானா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்கான தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் வாங்க ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூபாய் நான்கு லட்சம், ஆக மொத்தமாக (ரூ.16,00,000/-) ஒதுக்கீடு செய்து கடிதம் (6.4.2020) மாலை 4.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினேன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்யக்கோரி கேட்டுக்கொண்டேன். மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பாமல் அங்கேயே இருந்து மருத்துவம் பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு இடவசதியும், உணவு வசதியும் ஏற்படுத்தி தர கோரி கடிதம் எழுதினேன்

Christmas Wishes

.

Christmas Wishes

.

02-04-2020

காஞ்சிபுரம் மாவட்டத்தின், காந்திரோடு அருகே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதால் இராராஜி மார்க்கெட் மூடப்பட்டு 3கி.மீ. தூரம் வழிகள் அடைக்கப்பட்டு, கோனேரிகுப்பம் ஊராட்சியில், புதியதாக தற்காலிக காய்கறி அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளனவா? என ஆய்வு செய்தேன். மேலும், பூ வியாபாரத்திற்கும் இங்கு இடம் ஒதுக்கி தர மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தேன்

Christmas Wishes

.

Christmas Wishes

.

என்றென்றும் மக்கள் பணியில்

ezhilarasan