Gallery - 2020
30-05-2020
காஞ்சிபுரம் மாவட்ட சிறு ஆப்செட் அச்சக உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில், சங்கத்தின் நிர்வாகிகள் அச்சகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிவாரணம் வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்
28-05-2020
சட்டமன்ற பேரவையில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கினை புதுப்பித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, ரூ.15 கோடியில் விளையாட்டு மைதானம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது
27-05-2020
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் நிர்வாகிகள் என்னை சந்தித்து காஞ்சிபுரம் நகரில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சில பணிகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்
21-05-2020
காஞ்சிபுரம் நகரத்திலுள்ள 45 வட்டத்தில், மக்களுக்கு அரிசி பைகளை வழங்கினேன்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகாக ஊரடங்கு போடபட்டதினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கும், பட்டு கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் ரூ.5000/- நிதி வழங்கக் கோரி துணை இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, காஞ்சிபுரம் சரகம் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்
20-05-2020
கொரோனா பாதிப்பு பெருகி வரும் நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பாதிப்பு குறைந்தவுடன் நடத்த வேண்டும் என்று தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணரவணி சார்பில் 18.05.2020 அன்று தீர்மானம் எடுக்கப்பட்டதன் பேரில், இன்று கல்வி துறை அமைச்சரை சந்தித்து இளைஞரணி செயலாளரும், நானும் மற்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து மனு கொடுத்தோம்.
18-05-2020
காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள 12 வது வட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ளதால் வேலை இல்லாமல் அவதிப்படும் 175 நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கினேன்
15-05-2020
காஞ்சிபுரம் நகரத்தின், 12 வது வட்டத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில், நவீன பேருந்து நிறுத்தம் கட்ட காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் 9.5 லட்சம் நிதி ஒதுக்கி கட்டிட பணியைத் தொடங்கி வைத்தேன்.
காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்திற்காக வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பயணிகள் நிழலில் பேருந்திற்காக காத்திருக்கும் வகையில் பேருந்து நிலையத்தில் புதியதாக பயணிகள் நிழற்குடை அமைப்பது குறித்து ஆய்வு செய்தேன்
14-05-2020
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், காஞ்சிபுரம் 3-வது வார்டு, குஜராத் சத்திரம் அருகில் மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள், முடி திருத்துபவர்கள் ஆக மொத்தம் 800 மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 8 லட்சம் மதிப்பில் தலா 5 கிலோ அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினேன்
13-05-2020
கொரோனா பரவி வரும் இந்த சூழ்நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கொடுத்ததினால் கொரோனா அதிகமாக பரவ வாய்ப்புள்ளதை கருத்திற்கொண்டு, கொரோனா தனிமைபடுத்தப்பட்ட வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதினேன்
12-05-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் காரை பேட்டை, சந்தியா நகர், தாமரை தாங்கள் ஆகிய கிராம மக்கள் பயன் பெறும் வகையில் 1000 நபர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினேன்.
திருப்புட்குழி ஊராட்சியில் கிராம மக்கள், துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பயன் பெறும் வகையில் அரிசி, காய்கறிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினேன்.
கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில் இல்லாமல் மிகவும் எந்த வருவாயும் இல்லாமல் இருப்பதால், அரசு எந்த உதவியும் செய்யவில்லை எனக் கூறி காஞ்சி சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் என்னிடம் கூறினார்கள். மாவட்ட நிர்வாகத்திடம், அவர்கள் நிலையை எடுத்துக் கூறி சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள். நானும் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்.
10-05-2020
காஞ்சிபுரம் நகரத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, உணவு பொருட்கள் முதலிய அத்தியாவசிய பொருட்களை வழங்கினேன்
07-05-2020
தமிழ் நாடு விஸ்வ ஜனசக்தி கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் என்னை சந்தித்து உறுப்பினர்களுக்கு நிவாரணம் வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்
06-05-2020
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செவிலிமேடு நியாய விலை கடையை ஆய்வு செய்தபோது, அங்குள்ள கடை ஊழியரிடம் அரிசி, பருப்பு நன்றாக உள்ளதா? என்று கேட்டறிந்தேன். மண்ணெண்ணைய் தேவையான அளவு கையிருப்பு உள்ளதா? என்று அந்த கடை ஊழியரை கேட்டறிந்து அத்துடன் வெளியில் நின்றிருந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்னே். அதற்கான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தேன்
05-05-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம், அம்பி ஊராட்சியில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கினேன்.
காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், கபசுர மூலிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கினேன்.