Gallery - 2020
29-06-2020
தமிழ்நாடு கிராம கிருஸ்தவ ஆலய ஊழியர்கள் ஐக்கிய பேரவை சார்ந்த நபர்களுக்கு அரிசி வழங்கினேன்
24-06-2020
காஞ்சிபுரம் மாவட்ட நெசவாளர்களின் நலன் காக்க அவர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று எழுதிய கடிதம் குறித்து காஞ்சிபுரம் கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநர் அவர்கள் சந்தித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினேன்.
நான் 30.3.2020 மற்றும் 21.5.2020 அன்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கும் எழுதிய கடிதத்தில் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்க நெசவாளர்கள் தனியாக நெசவு செய்யும் நெசவாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள நெசவாளர்கள் நெசவு தொழில் இல்லாமல் எந்த வருவாய் இல்லாத காரணத்தால் கூட்டுறவு சங்க அனைத்து உறுப்பினர்கள் தனியாக நெசவு செய்யும் நெசவாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ரூ.5000/- வழங்க வேண்டும் என்று துறை செயலாளர் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். அதன் அடிப்படையில் அமைப்பு சாரா தொழிலாளர் நலத்துறை மூலமாக 8155 நபர்களுக்கும், கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள் 3164 நபர்களுக்கும், தனியாக நெசவு செய்யும் நெசவாளர்கள் 2000 நபர்களுக்கும் ஆக மொத்தம் 13319 நபர்களுக்கு தலா ரூபாய்.2000 பெற்று தந்துள்ளேன்
22-06-2020
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பரந்தூர் கிராமத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13.5 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையின் சுற்றுப்புற சுவர், நுழைவு வளையம் புதியதாக கட்டும் பணிகளை துவக்கி வைத்தேன்
காஞ்சிபுரம் தொகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் படும் ஒரு சில பிரச்சினைகள் குறிப்பாக சரியான அறிவிப்பு இல்லாமல் வாகனங்கள் மடக்குவது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினேன்.
02-06-2020
திருக்காலிமேடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை என தொகுதி மக்களிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை தொடர்ந்து அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து உரிய அதிகாரியை தொடர்பு கொண்டு அனைத்து பொருட்களையும் முறையாக வழங்க உத்தரவிட்டேன்.
01-06-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசரவாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்ட 2019-20 தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15.47 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினேன்.
அதேபோல் முத்துவேடு கிராமத்தில் ரூ. 13.8 லட்ச மதிப்பில் ரேஷன் கடை அமைக்க அடிக்கல் நாட்டினேன்.