Gallery - 2020
16-07-2020
காஞ்சிபுரம் நகரின் பிள்ளையார்பாளையம் பகுதியில் மட்டும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக 31.07.2020 வரை தளர்வற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு நிவாரண தொகை வழங்கபடவில்லை என்பதை அறிந்து அவர்களுக்கு குறைந்தப்பட்ட நிவாரண தொகையாக ரூ.1000/- வழங்க வேண்டும் என கேட்டு மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர் - நிதித்துறை ஆகியோருக்கு கடிதம் எழுதினேன்.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பல்கலைக் கழக மானிய குழுவின் செயலாளர் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்
.
.
.
.
06-07-2020
காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த "B3 காஞ்சி தாலுக்கா காவல் நிலையம்" சின்ன காஞ்சிபுரம் திருவீதிபள்ளம் என்ற ஒதுக்குப்புறமான பகுதியில் பொதுமக்கள் எளிதில் அணுகுவதற்கு அசௌகரியமான வகையில் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து B3 காவல் நிலையத்தை பொதுமக்கள் எளிதில் அணுக கூடிய இடமான தாலுக்கா அலுவலக வளாகத்தில் மாற்றிட கோரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கும், தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் நிதிதுறை செயலாளர் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்
.
.
.
03-07-2020
காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கோனேரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள சண்முகா நகர், அசோக் நகர் இணைக்கும் சாலையில் புதிய சிமெண்ட் சாலையை அமைக்க பொதுமக்களிடமிருந்து வைத்த கோரிக்கையின் பேரில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்.7.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்