Gallery - 2020
31-08-2020
காஞ்சிபுரம் நகரத்தில் என் தந்தையாரின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கினேன்
.
.
29-08-2020
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள 12,13 ஆகிய வட்டத்தில் உள்ள பொதுமக்கள் என்னை சந்தித்து சாலை புதை வடிகால் வசதி வேண்டி மனு அளித்தனர்.
.
.
21-08-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் நகரத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பின்வரும் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தேன்.
1) காஞ்சிபுரம் நகரில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள பழைய 14 வது வட்டத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் 16 குடும்பத்தினர் சுமார் 60 ஆண்டு காலம் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மனை பட்டா வேண்டி என்னிடம் மனு அளித்தார்கள் அது குறித்த மனுவும்,
2) தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் தளர்வு அளிக்கப்பட்டு வணிக நிறுவனங்களையும், சிறு, குறு கடைகளையும் மாலை 7 மணி வரை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் வணிக நிறுவனங்களையும், சிறு, குறு நிறுவனங்களையும் மாலை 5.00 மணி வரை மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுகிறது. எனவே காஞ்சிபுரத்திலும் மற்ற மாவட்டங்களைப் போல மாலை 7.00 மணி வரை கடைகளை திறந்து வைத்து, தொழில் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
3) காஞ்சிபுரம் நகரத்தில் பழைய இரயில்வே ரோடு சாலையில் இராஜாஜி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக அந்த மார்க்கெட் பகுதி அடைக்கப்பட்டு வையாவூர் சாலையில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டது. ஆனால் மழையின் காரணமாக அந்த பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டதால் அங்கு இருந்த மார்க்கெட், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப்பட்ட மார்க்கெட்டிற்கு மக்கள் எளிதில் செல்ல முடிவதில்லை என்று மக்களும், இதனால் வியாபாரிகளுக்கும் நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகளும் என்னைச் சந்தித்து காய்கறி மார்க்கெட்டை பழைய இடமான பழைய இரயில்வே ரோடு சாலையில் உள்ள இடத்திற்கு மாற்றி தரக்கோரி மனு அளித்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததன் காரணமாக மார்க்கெட் பகுதியில் போடப்பட்ட தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளது. எனவே அதை கருத்திற்கொண்டு இராஜாஜி மார்க்கெட்டில் தேவையான அடிப்படை வசதிகளை ஒரு வாரத்தில் செய்து வியாபாரிகளுக்கு இடமாற்றம் செய்து தர கேட்டுக் கொண்டேன்.
4) காஞ்சிபுரம் நகரத்தின் பெரும்பாண்மையான இடங்களில் இளம் வயது சிறுவர்களை வைத்து பிச்சை எடுக்கும் செயல் நடந்து வருகிறது. அவர்களின் எதிர்காலம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5) கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக காஞ்சிபுரம் நகரத்தில் பெரும்பான்மையான சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை முன்னிட்டு, அவற்றை அப்புறப்படுத்த, கடந்த ஜூன் மாதத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் வழங்கினேன்.
அதில் நகராட்சி நிர்வாகம் அமைத்த தடுப்புகளை அகற்றிவிட்ட நிலையில் காவல்துறை அமைத்த சிமெண்ட் தடுப்புகள் 40ற்கும் மேற்பட்ட தெருக்களில் அகற்றப்படாமல் இருக்கிறது. அதனால் மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதால் அந்த தடுப்புகளை எடுக்கக் கோரி ஜுன் மாதத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் இறுதியாகியும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன்.
மாவட்ட ஆட்சியர் உடனே காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசி இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்
.
.
.
18-08-2020
காஞ்சிபுரம் நகராட்சிக்கு சென்று நகராட்சி ஆணையர் திருமதி மகேஸ்வரி அவர்கள், நகராட்சி பொறியாளர் திரு ஆனந்த ஜோதி அவர்களையும் சந்தித்து பிள்ளையார் பாளையம் பகுதியில் நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் புதைவடிநீர்கால்வாய் வசதி இல்லாத பகுதிக்கு சுமார் 850 பேர் இருக்கும் அந்த பகுதிக்கு உடனடியாக புதைவடிநீர்கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
காஞ்சிபுரம் நகரில் 14-வது வட்டத்தில் இரண்டு சாலைகள் சந்திக்கும் பகுதியில் 3அடி உயரம் வித்தியாசம் உள்ளதால் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது என்று அந்த பகுதி மக்கள் மனு அளித்ததின் பேரில் உடனடியாக அந்த இடத்தை ஆய்வு செய்து அந்த சாலையை சீரமைக்க நகராட்சி பொறியாளருக்கு உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில் உடனடியாக அந்த சாலை சீரமைக்கப்பட்டது
.
.
.
.
16-08-2020
கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பு நடந்தும் தேசிய கல்விக் கொள்கை 2020 எதிர்ப்பு வலையரங்கம் இனைய வழியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மாணவர் நலன் காக்கும் வகையில் என்னுடைய கருத்தை எடுத்துரைத்தேன்
.
.
14-08-2020
காஞ்சிபுரம் பொன்னேரிகரை இரயில்வே மேம்பாலம் கட்டபடாமல் இருப்பது குறித்து 30.04.2020 அன்று நான் எழுதிய கடிதத்தின் பேரில் 05.08.2020 அன்று அவர்கள் எழுதிய கடிதம் இன்று கிடைக்கபெற்றது.
.
.
07-08-2020
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் கொரோனா வைரஸ் பாதித்து மரணமடைந்தவர்களை அடக்கம் செய்யும் தன்னிகரற்ற பணியாற்றும் தோழர்களை கௌரவித்து மரியாதை செய்தேன்
.
.
01-08-2020
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ரெம்டெசிவர் மற்றும் TOCILIZUMAB போன்ற உயிர் காக்கும் மருந்து பற்றாக்குறையாக உள்ளது என கேள்வி பட்டு அந்த சமயம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் திரு. டாக்டர்.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. அவர்களிடம் கோரிக்கை வைத்தேன். மேலும் அரசு மருத்துவமனை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கட்டிடத்தில் உரிய தொழிற்நுட்ப பணியாளர் யாரும் நியமிக்கபடாததால் அது மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படாமல் உள்ளது குறித்தும், கொரோனா சிகிச்சைக்கு சித்த முறையில் வைத்தியம் பார்க்க வசதியாக அரசு வழிவகை செய்வது குறித்தும் அவரிடம் தெரிவித்தேன்