Gallery - 2020
30-09-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரம், 37-வது வட்டத்தில் உள்ள KMV நகரில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13.50 லட்சம் மதிப்பில் புதியதாக அமையவுள்ள நியாய விலை கடை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டட பணியை துவக்கி வைத்தேன். உடன் நகராட்சி ஆணையர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், நகராட்சி பொறியாளர் திரு. ஆனந்த ஜோதி அவர்கள். உதவி பொறியாளர் திருமதி. தமிழ் செல்வி அவர்கள், நகர செயலாளர் திரு. சன்பிரான்டு ஆறுமுகம் அவர்கள், மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், சந்துரு, வெங்கடேசன், சங்கர், சுதாகர், சுரேஷ், செந்தில், பாண்டியன் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 37-வது வட்டத்தில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.5 லட்சத்தில் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகில், புதியதாக நவீன பேருந்து நிறுத்தம் கட்டட பணியை துவக்கி வைத்தேன். உடன், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் திருமதி, மகேஸ்வரி அவர்கள், நகராட்சி பொறியாளர் திரு. ஆனந்த ஜோதி அவர்கள், உதவி பொறியாளர் திருமதி. தமிழ் செல்வி அவர்கள், நகர செயலாளர் திரு. சன்பிரான்டு கே. ஆறுமுகம் அவர்கள், மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், சந்துரு, வெங்கடேசன், சங்கர், சுரேஷ், சுதாகர், விமல், பாண்டியன், திரையன், செந்தில் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாமல் ஊராட்சியில், பம்பை கால்வாயில் முள் செடி வளர்ந்து, கால்வாய் தூர் வாராமல் பல ஆண்டுகளாக தாமல் ஏரிக்கு நீர்வரத்து தடைபட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் 21.09.2020 அன்று அளித்ததை மனுவை முன்னிட்டு இன்று 30.09.2020 அந்த கால்வாய் ஏழு கிலோமீட்டருக்கு தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், எம்.எஸ். சுகுமார் திரு.எத்திராஜ், திரு. மனோகரன், செழியன், அறிவழகன், பார்த்திபன், பகலவன் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் இருந்தனர்
.
.
.
.
28-09-2020
விவசாயிகளின் விரோதச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, மத்திய அரசையும், அதற்கு துணை நிற்கும் அடிமை அதிமுக அரசையும் கண்டித்து, காஞ்சிபுரத்தில் உள்ள அம்பி கிராமத்தில், மாண்புமிகு கழக தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துக் கொண்டனர்
.
.
25-09-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரம், 3-வது வட்டத்தில் உள்ள சர்வ தீர்த்த குளக்கரையில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சத்தில் புதியதாக காரிய மண்டபம் அமைக்க, அடிக்கல் நாட்டி கட்டட பணியை துவக்கி வைத்தேன். உடன் நகராட்சி பொறியாளர் திரு. ஆனந்த ஜோதி, காஞ்சிபுரம் மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், சந்துரு, கருணாநிதி, வெங்கடேசன், தேவராஜ், இளந்திரையன், சிவகுமார், அபுசாலி, சுகுமார், குமரேசன், ஜெய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.
.
.
23-09-2020
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 13,00,000 லட்சத்தில் புதிய சுற்றுப்புற சுவர் அமைத்திட, அடிக்கல் நாட்டி, கட்டிட பணியை துவக்கி வைத்தேன். உடன், மாவட்ட விளையாட்டு அலுவலர், உதவி பொறியாளர், நகர செயலாளர் திரு. சன்பிரான்டு ஆறுமுகம் அவர்கள், மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், காஞ்சீபுரம் ஒன்றிய செயலாளர் பி.எம். குமார் அவர்கள், சந்துரு, வெங்கடேசன், பாலன், சேகர், எல்லப்பன், மாரிமுத்து, ராம் பிரசாத், கோவிந்தராஜ், மோகன் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்
.
.
22-09-2020
காஞ்சிபுரம் தி.மு.க. நகர அலுவலகத்தில், கழக தலைவர் அறிவுறுத்தலின்படி எல்லோரும் நம்முடன் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தேன். உடன், நகர செயலாளர் திரு. சன்பிரான்டு கே. ஆறுமுகம் அவர்கள், மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், சந்துரு, ஜெகன், கருணாநிதி, வெங்கடேசன், பாலன், யுவராஜ், கமலக்கண்ணன், அரவிந்த், மோகன், பாண்டியன் கந்தவேல், முரலி மற்றும் கழகத்தில் இணைய உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
.
.
21-09-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை எடுத்துக் கொண்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. பா. பொன்னையா அவர்களை சந்தித்தேன். தாமல் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியை தூர்வாரி, நீர்வரத்து கால்வாயை சரி செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன். மேலும், தாமல் கிராமத்தில் நிலையான நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தரும்படி கேட்டுக்கொண்டேன். மாவட்ட ஆட்சியர் அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுத்து 1.10.2020 முதல் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையம் இயங்கும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நிரந்தர கட்டிடம் இல்லாததால் இதற்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டித் தருவதாக கூறினேன். மேலும், நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேல்கதிர்பூர், கோவிந்தவாடி ஆகிய ஊர்களிளும், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார் ஆட்சியர். உடன் திரு.பி.எம். குமார், எம்.எஸ். சுகுமார், கே. மனோகரன், கே.எஸ். எத்திராஜ், எஸ்.அறிவழகன், ஆர்.செழியன், எம்.பாலு, எம். பாஸ்கர், எஸ். செல்வம், எம். ஏகாம்பரம் ஆகியோர் இருந்தனர்
.
.
.
.
18-09-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரில் பச்சையப்பன் மகளிர் கல்லூரி மாணவிகளுக்காகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிழற்குடை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்தேன். உடன் நகராட்சி பொறியாளர் திரு. ஆனந்த ஜோதி அவர்களும், உதவி பொறியாளர் திருமதி. தமிழ் செல்வி அவர்களும், உதவி பொறியாளர் திரு. பிரகாஷ் அவர்களும், கழக செயலாளர்கள் சுரேஷ், சங்கர், சுதாகர், கிரி, எம்.எஸ். பாலன், செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.
.
.
17-09-2020
தந்தை பெரியார் அவர்களின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு.க. சுந்தர் MLA அவர்கள். உடன், கழக மாணவர் அணி செயலாளராகிய நானும், காஞ்சிபுரம் மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்களும், நகர செயலாளர் திரு. சன்பிரான்டு ஆறுமுகம் அவர்களும், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் திரு. அ செங்குட்டுவன் அவர்களும், திரு. எஸ்.கே.பி. சீனுவாசன் அவர்களும், ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்களும், குமணன் அவர்களும், நகர ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரம், பிள்ளையார்பாளையம், 14-வது வட்டத்திற்குட்பட்ட அங்காளம்மன் கோவில் அருகில், பாதாள சாக்கடை இணைப்பு இல்லாமல் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்த பிறகு சாலை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் அவர்களிடம் நேரில் சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்
.
.
.
.
16-09-2020
14.9.2020 சட்டப்பேரவையில் எம்.பி, எம்.எல்.ஏ.-களுக்கு இரங்கல் தெரிவித்து, சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், பேரவையில் இருந்து தலைவருடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள் வெளியே வருகின்றனர்
.
15-09-2020
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினேன். பின்னர் மாவட்ட அலுவலகத்தில் உள்ள சிலைக்கு, நகர அலுவலகம் நகராட்சி உள்ள சிலைக்கு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு.க. சுந்தர் MLA அவர்களும், கழக மாணவர் அணி செயலாளராகிய நானும், காஞ்சிபுரம் மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்களும், நகர செயலாளர் திரு. சன்பிரான்டு கே. ஆறுமுகம் அவர்களும், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி. சீனுவாசன், ஒன்றிய செயலாளர்கள் திரு.பி.எம். குமார், சேகர், குமணன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
.
.
14-09-2020
கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் (BAN NEET) அச்சிட்ட முகக் கவசத்தை அணிந்து சென்றேன்
.
13-09-2020
தி.மு. கழக இளந்தலைவர், இளைஞர் அணி செயலாளர், திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும், தி.மு. கழக மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான நானும், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட தருமபுரி மாணவர் ஆதித்யா உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம். மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம். இறந்த மாணவரின் குடும்பத்திற்கு, கழக இளைஞர் அணி செயலாளர் அவர்கள் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ரூபாய் 5 லட்சம் நிதி வழங்கினார்.
.
.
12-09-2020
தி.மு. கழக இளந்தலைவர், இளைஞர் அணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும், தி.மு. கழக மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான நானும் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மதுரையை சேர்ந்த மாணவி செல்வி ஜோதி ஸ்ரீதுர்காவிற்கு அஞ்சலி செலுத்தி, அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம். மேலும் மாணவி குடும்பத்திற்கு கழக இளைஞர் அணி செயலாளர் அவர்கள் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ரூபாய் 5 லட்சம் நிதி வழங்கினார்.
.
.
10-09-2020
இளந்தலைவர், இளைஞர் அணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அரியலூர் மாணவன் விக்னேஷ், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிதி ரூபாய் 5,00,000 லட்சம் வழங்கினார். அவருடன் நானும் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன்.
.
08-09-2020
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் இளந்தலைவர் இளைஞர் அணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன், கழக மாணவர் அணி செயலாளர் ஆன நானும் இணைந்து, சென்னை அன்பகம் முன்பு கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டேன். தமிழ் நாடு முழுவதும் இளைஞர் அணி மாணவர் அணி நிர்வாகிகள் அவரவர் இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
.
.
07-09-2020
தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்டு, விருது பெற்ற நல்ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை வழங்கி எனது சார்பில் பரிசு வழங்கினேன். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரம், ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 9.5 லட்சத்தில் புதிய நவீன பேருந்து நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரம், விளக்கடி கோயில் தெருவில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 9.5 லட்சத்தில், புதிய நவீன பேருந்து நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.
.
.
.
.
05-09-2020
கழக இளைஞர் அணி - மாணவர் அணிகளின் மாநில மாவட்ட மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. கழக இளந்தலைவர், இளைஞர் அணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கழக மாணவர் அணி செயலாளர் திரு. சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள் தலைமையிலும், இணை துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் இளைஞர் அணி, மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
.
.
.
03-09-2020
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, தாமல் ஊராட்சி மக்கள் என்னை சந்தித்து நெடுஞ்சாலையினை பாதுகாப்பாக கடக்க ஒரு பாலம் வேண்டும் என்று கேட்டு கொண்டதின் பேரில் கடிதத்தை அளித்தேன். அவரும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய நியாய விலை கட்டிடம் வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில் மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தினேன்