Gallery - 2020
31-10-2020
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், முப்பெரும் விழா நடைபெற்றது. திமுக தலைவர் தளபதி அவர்கள் காணொளி மூலம் விழா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்
.
.
27-10-2020
காஞ்சிபுரம் நகரில் இளையோர் மன்றம் வளர்ச்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். உடன் காஞ்சிபுரம் மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், நகர அவைத்தலைவர் திரு. சந்துரு அவர்கள், சங்கர், விமல் மற்றும் இளைஞர் அணி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் நகரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தை பாதுகாக்க, அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துக் கொண்டு, போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டேன்.
ஸ்ரீ அற்புத சாய்பாபா தியான நிலையத்தில் ஸ்ரீஷீரடி சத்ய சாய்பாபாவின் 102 ஜீவ சமாதி தினம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தேன். விழாவிற்கு திமுக காஞ்சிபுரம் மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன் B.A அவர்கள் முன்னிலை வகித்தார்
.
.
.
.
26-10-2020
காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் கிராமத்தை சார்ந்த இராணுவ வீரர், அசாம் மாநிலத்தில் இராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, வாகன விபத்து ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார். மறைந்த ராணுவ வீரர் கு.ஏகாம்பரம் அவர்களின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினேன். உடன் ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
.
.
24-10-2020
மருத்துவ கல்லூரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உடனே ஒப்புதல் அளிக்க கோரி, மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசைக் கண்டித்து திமுக-வின் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஆளுநர் மாளிகை முன்பு மாண்புமிகு கழக தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழக மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டு, கண்டன முழக்கமிட்டேன்
.
.
23-10-2020
கழக மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான நானும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம் MP அவர்கள், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. பா. பொன்னையா IAS அவர்களை சந்தித்து,
1.காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் தாமல், கோவிந்தவாடி ஆகிய இரண்டு இடங்களில் புதிய கட்டிடம் கட்ட கடிதம் வழங்கினேன்.
2. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, காஞ்சிபுரம் நகரில் 10 வது வட்டத்தில் புதிய நியாய விலை கடை கட்டடம் கட்ட கடிதம் வழங்கினேன்.
3. காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காஞ்சிபுரம் 14 வட்டத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட கடிதம் வழங்கினேன்.
4. காஞ்சிபுரம் ஒன்றியத்தில் அம்பி, கருப்படைதட்டடை-பொன்னேரி வரை உள்ள கால்வாய் தூர் வார வேண்டும் என்று கடிதம் வழங்கினார்.
5. திருப்புக்குழி - பாலுசெட்டி சத்திரம் பாலம் குறித்து ஆலோசனை செய்தேன்.
6. கோவிந்தவாடி, மேல்கதிர்பூர், கம்மார்பாளையம் ஆகிய இடங்களில் நாளை முதல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
7. தாமல் ஊராட்சியில் தாமல் ஏரிக்கு நீர் வரத்து கால்வாய் காஞ்சிபுரம் எல்லை வரை தூர் வாரப்பட்டு, மேலும் ராணிப்பேட்டையில் 7 கிலோமீட்டர் தூரம் தூர் வார மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
.
.
22-10-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகராட்சி, புதிய 13 வது வட்டத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13.5 லட்சத்தில் புதியதாக நியாய விலைக் கடை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டி, பணியை துவக்கி வைத்தேன். உடன் சன்பிரான்டு ஆறுமுகம் அவர்கள் சந்துரு, கருணாநிதி, வெங்கடேசன், பாலன், முருகன், முகுந்தன், வடிவேலு, சேகர், நாராயணன், பூபதி, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், நகராட்சி பொறியாளர் திரு. ஆனந்த ஜோதி அவர்கள், உதவி பொறியாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரத்தில், 14-வது வார்டு, பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து இருப்பதை ஆய்வு செய்தேன். உடனடியாக புதிய அங்கன்வாடி மையத்தை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி தருவதாக உறுதி அளித்தேன். உடன் உமாபதி, தமிழ், தியாகு, கங்காதரன், பழனி, பாபு, தயாளன், அருணாசலம், முனுசாமி, குமரன், ராஜாமணி ஆகியோர் இருந்தனர்.
.
.
.
.
21-10-2020
மதுராந்தகத்தில் நடைபெற்ற காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தளபதி அவர்கள் மருத்துவ நுழைவு கல்லூரி தேர்வான நீட் தேர்வில், தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு 7.5 சதவீதம் வழங்கும் மசோதாவை நிறைவேற்றி பிறகும், ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதித்து வருகிறார். ஆகையால், கட்சிக் பாகுபாடு இன்றி அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராடுவதற்கு தயார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று 21.10.2020 இரவு 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் நேரலையில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.
.
.
17-10-2020
காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் (DISHA) நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கலந்துக் கொண்டேன். காஞ்சிபுரம் தொகுதியில் புதியதாக இணைக்கப்பட்ட பகுதி செவிலிமேடு, ஓரிகை, நத்தப்பேட்டை, தேனம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு புதை வடிகால் வசதி செய்து தரவேண்டும் என்றும், இதுகுறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி உள்ளதையும் நினைவு கூர்ந்தேன். காஞ்சிபுரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதையும் சுட்டி காட்டினேன்
காலை 9.30 மணிக்கு செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் என் தலைமையில் வேலை வாய்ப்பு முகாம் காணொளி வாயிலாக நடைபெற்றது. நிகழ்ச்சியை தி.மு.க. இளைஞர் அணி செயலாளர், இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். முகாம் ஒருங்கிணைப்பாளர் திரு. ராகவன் ராமு அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. க. சுந்தர் MLA அவர்கள், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம் MP அவர்கள், மாவட்ட அவைத் தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன், நகரச் செயலாளர் திரு. சன்பிராண்ட் கே. ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாம் விளக்கவுரையை திரு. எம். மணிகண்டன், பொது மேலாளர் (HR), JM Frictech India Pvt. Ltd., வழங்கினர். வேலை வாய்ப்பு முகாமில் நோக்கியா, மதர்ஸ்சன், டி.வி.எஸ், சோழா, பஜாஜ், கோமாட்சு முதலிய முக்கிய நிறுவனங்கள் உட்பட 41 நிறுவனங்கள் பதிவு செய்து நேர்காணல் நடத்தியது. வேலைவாய்ப்பு முகாம் நேர்காணலில் குகூள் மீட் செயலி வழியாக சற்றொப்ப 4000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றனர். நிகழ்ச்சிக்கு திருமதி. A. மணிமேகலை அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகரம், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம், வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் சி.வி.எம்.அண்ணாமலை அறக்கட்டறையின் அறங்காலவர்கள் கலந்துக் கொண்டனர். சூம் செயலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
.
.
.
.
15-10-2020
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு திமுக இளைஞர் அணி செயலாளர், இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன், திமுக மாணவர் அணி செயலாளர் ஆகிய நானும் இணைந்து, இருவர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு, திமுக இளைஞர் அணி செயலாளர் இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன், திமுக மாணவர் அணி செயலாளர் ஆகிய நானும் இணைந்து, இருவர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள, கூட்ட அரங்கில் வேகவதி ஆற்றுப்படுக்கையில் உள்ளவர்களை மறுகுடியமர்த்துதல் தொடர்பான விளக்கக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டேன். மறுகுடியமர்த்தல் செய்யப்படும் பயனாளிகள் ரூபாய்.1,50,000/- கட்டவேண்டும் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. அதை முழுவதுமாக அரசு ஏற்றுக் கொண்டு இலவசமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
.
.
.
.
14-10-2020
திமுக தலைவர் ஆணையை ஏற்று, இளைஞர் அணி, மாணவர் அணியின் மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் காணொளி மூலமாக இளந்தலைவர் திமுக இளைஞர் அணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், திமுக கழக மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான என் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டிலேயே இறுதிவரை தொடரவேண்டும் என்ற முடிவை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து, திமுக இளைஞர் அணி, மாணவர் அணி நாளை தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பாக போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
.
.
13-10-2020
அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்கதிர்பூர் கிராமத்திற்கு கால்நடை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டேன். அதன் அடிப்படையில் இன்று புதிய கால்நடை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
.
.
12-10-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், என் பரிந்துரையின் பெயரில் நடமாடும் நியாய விலைக் கடைகளை அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, 12 நடமாடும் நியாய விலைக் கடைகள் அமைக்கபடவிருந்தன. ஆனால், சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்காமல், கடைகளை திறக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதை அறிந்து, துணை பதிவாளர், பொது விநியோக திட்டம் கூட்டுறவு அவர்களின் அலுவலகம் சென்று, சட்டமன்ற உறுப்பினரை அழைக்காமல் யார் துவங்க சொன்னது? என்று கேள்வி எழுப்பினேன். இணை பதிவாளர் அவர்கள் தவறுக்கு வருத்தம் தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து நடமாடும் நியாய விலை கடைகளை துவக்க ஏற்பாடு செய்தார்
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரம், 39-வது வட்டத்தில் உள்ள வேலாத்தம்மன் கோவில் தெருவில், நகரும் நியாய விலைக் கடையை துவக்கி வைத்தேன். உடன் நகர செயலாளர் திரு. சன்பிரான்டு கே. ஆறுமுகம் அவர்கள், மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், திரு. சுகுமார் அவர்கள், திரு. சந்துரு, திரு. கருணாநிதி, வெங்கடேசன், பாலன், சுரேஷ், கமலக்கண்ணன், எல்லப்பன், செந்தில், CSR சிவமணி அவர்கள், கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மேல்கதிர்பூர் ஊராட்சியில் புதிய நகரும் நியாய விலைக் கடையை துவக்கி வைத்தேன். உடன் மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், தசரதன், சுகுமார், ரமேஷ், சேகர் மற்றும் ஊராட்சி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக மக்கள் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, பாலுசெட்டி புதூர் கிராமத்தில், புதிய நகரும் நியாய விலைக் கடையை துவக்கி வைத்தேன். உடன் மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், தசரதன், சுகுமார், ரமேஷ், மனோகரன், அறிவழகன், சேகர் மற்றும் ஊராட்சி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்
.
.
.
.
11-10-2020
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் வெளியே சென்று தேட முடியாததை அறிந்து காணொளி மூலமாக வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்க மாபெரும் முகாம் ஒன்றை எனது பாட்டனார் செந்தமிழ் செல்வர் சிவிஎம் அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்தேன். இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முகாமை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்குகிறார். எனவே, காஞ்சிபுரம் தொகுதியை சார்ந்த படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
.
10-10-2020
காஞ்சிபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் கொரானா ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களே!
என் அருமை காஞ்சிபுரம் இளைஞர்களே!
உங்களின் கனவை நனவாக்க இதோ ஓர் அருமையான வாய்ப்பு!
செந்தமிழ்ச் செல்வர் சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் காணொளி காட்சி (Zoom App) மூலமாக நடைபெறும் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் 2020-ல் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறுவீர்.
50 நிறுவனங்கள் உங்களுக்கு வேலைவாய்ப்பளிக்க காத்திருக்கிறார்கள்!
2500 வேலைவாய்ப்புகள் உங்களுக்காகவே இருக்கின்றன!
வாருங்கள், பயன்பெறுங்கள்!
நாள்: 17, அக்டோபர்,2020 (சனிக்கிழமை), காலை 9.30 மணி
சி.வி.எம்.பி. எழிலரசன் B.E., B.L.,
செயலாளர், திமுக மாணவரணி
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்
டுவிட்டர்: EzhilarasanCvmp
இன்ஸ்டாகிராம்: cvmp_ezhilarasan
காஞ்சிபுரம் நகரில், கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் பொருட்கள் வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 08.10.2020 அன்று கடிதம் கொடுத்ததின் அடிப்படையில், இன்று அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. இதை நேரில் சென்று ஆய்வு செய்து பொருட்களை வழங்கினேன். உடன் முன்னாள் கவுன்சிலர் திருமதி. சுதா அவர்கள், வட்ட செயலாளர் திரு.ரமேஷ் அவர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் பிரியா அவர்கள் சி.எஸ்.ஆர். சத்தியா அவர்கள், கடை ஊழியர்கள் பொதுமக்கள் இருந்தனர்.
.
.
.
08-10-2020
கிழக்கு ராஜ வீதி (பூக்கடை சத்திரம்) 8-வது வட்டக் கழக (பழைய 10-வது வட்டம்) பகுதிவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாயவிலை கடை (ரேஷன் கடை) கட்டடம் வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர். நிச்சயமாக உங்கள் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதி அளித்தேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. பா. பொன்னையா அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன். குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 41 வது வட்டத்தில் உடைந்த பாலத்திற்கு பதில் புதிய பாலம், உயர் கோபுர மின் விளக்கு, மகாலிங்கம் நகரில் குளத்தை தூர் வார வேண்டும், மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தரும்படி மாவட்ட ஆட்சியர் திரு. பா. பொன்னையா அவர்களை நேரில் சந்தித்து, மேற்கண்ட பணிகளை செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன். உடன் புவனகிரி, சரவணன் மற்றும் 41-வட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
காஞ்சிபுரம் நகரில் கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெருவில் உள்ள நியாய விலை கடையில் பொருட்கள் முறையாக வழங்குவது இல்லை என்று வந்த புகார் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. பா. பொன்னையா அவர்களை சந்தித்து உடனடியாக பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். உடன் முன்னாள் கவுன்சிலர் திருமதி. சுதா, வட்ட செயலாளர் திருமதி. ராதா மற்றும் வட்ட நிர்வாகிகள் இருந்தனர்
.
.
.
.
07-10-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரம், 33-வது வட்டத்தில் உள்ள ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8.5 லட்சத்தில் புதியதாக நியாய விலை கடை அடிக்கல் நாட்டி, கட்டிட பணியை துவக்கி வைத்தேன். உடன், நகராட்சி ஆணையர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், நகராட்சி பொறியாளர் திரு. ஆனந்த ஜோதி அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட அவைத்தலைவர் திரு .சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், நகர செயலாளர் திரு. சன்பிரான்டு K. ஆறுமுகம் அவர்கள், S.சந்துரு, G.கருணாநிதி, S.வெங்கடேசன், C.K.V. தமிழ் செல்வன், M.S. பாலன், பாலு, A. யுவராஜ், U. சோபன், V. கமலக்கண்ணன், கே.கிரி, M.S.B. பாண்டியன், A. பாலமுருகன், கந்தவேல், ஏழுமலை, மா வெங்கடேசன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
.
.
.
01-10-2020
சென்னையில், மாண்புமிகு கழக தலைவர் அவர்களின் ஆணைக்கினங்க இந்தி திணிப்புக்கு எதிராகவும், ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை திணிப்புக்கு எதிராகவும், டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் புறக்கணிப்பு எதிராகவும், தபால் துறை, இரயில்வே துறை, வங்கிகள் என்று அனைத்து போட்டி தேர்விலும், இந்தி திணிப்புக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், திராவிட முன்னேற்றக் கழகம் மாணவர் அணி சார்பில் அதன் செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான என் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்