Gallery - 2020
18-11-2020
காஞ்சிபுரம் நகரத்தில் 19 வது வட்டத்தில் பல்லவர்மேடு பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ராஜ் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அங்கு சென்று பார்வையிட்டு, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிவாரணம் கிடைக்க பரிந்துரைத்தேன். உடன் அய்யாவு, எம்.எஸ். பாலன், சு. வெங்கடேசன் ஆகியோர் இருந்தனர்.
.
18-11-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், குழைந்தைகள் நண்பர்கள் வாரம் முன்னிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், நானும் குழைந்தைகளின் நண்பன் என்று குழைகளுக்கு கைப் பட்டை கட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார், காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. க. குமணன் அவர்கள், பி.எம். நீலகண்டன் மற்றும் Hand and Hand நிர்வாகிகள் இருந்தனர்.
.
.
16-11-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரின் 38 வது வட்டத்தில் கனமழை காரணமாக சாலை வழியே தண்ணீர் தேங்கி நிற்கிறது என்ற செய்தி அறிந்து, அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, தேங்கி நிற்கும் நீர் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தேன். உடன் காஞ்சிபுரம் நகர செயலாளர் திரு. சன்பிரான்டு கே ஆறுமுகம், எஸ். சந்துரு, ஜி. கருணாநிதி, டி. தேவராஜ், சங்கர் மற்றும் நகராட்சி ஆய்வாளர் திரு. ரமேஷ் ஆகியோர் இருந்தனர்
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரின் 31 வது வட்டத்தில் ஆய்வு செய்தேன். கனமழை காரணமாக சாலையில் மழைநீர் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது . இதையடுத்து அந்த இடத்தில் கால்வாய் அமைக்க நகராட்சி பொறியாளர் அவர்களிடம் தெரிவித்தேன். நகராட்சி பொறியாளரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். உடன் காஞ்சிபுரம் நகர செயலாளர் திரு. சன்பிரான்டு கே. ஆறுமுகம், எஸ். சந்துரு, ஜி. கருணாநிதி, சுதா, ரமேஷ், சுப்பிரமணி மற்றும் நகராட்சி ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
.
.
.
16-11-2020
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் 2021 வெளியீட்டார். அதை மாவட்ட வருவாய் அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொண்டேன். உடன், மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன், நகர செயலாளர் திரு. சன்பிரான்டு கே. ஆறுமுகம், பி.எம். குமார், எஸ். சந்துரு, ஜி. கருணாநிதி, வ. ஜெகன்நாதன், எம்.எஸ். பாலன், செந்தில், விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்
.
.
16-11-2020
காஞ்சிபுரம் நகரில் கனமழை காரணமாக சிங்க பெருமாள் கோயில் அருகில் உள்ள குளத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அந்த இடத்தை ஆய்வு செய்து, கோயில் EO அவர்களை தொடர்பு கொண்டு, உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை பாதுகாப்பு வேலி அமைக்குமாறும் கேட்டுக்கொண்டேன். கோயில் அதிகாரியும் உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதுகாப்பு வேலி கட்டப்படும் என்று கூறினார்
.
.
16-11-2020
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள சி.வி.எம். நகர், புதுநகர் ஆகிய ஊர்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதை அறிந்து அங்கு சென்று, உடனடியாக நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தேன். உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், சசிகுமார் அவர்கள், விஜி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் இருந்தனர்.
.
.
16-11-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரின் 4 வது வட்டத்தில் கனமழை காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை அறிந்து உடனடியாக அங்கு சென்று, தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தேன். உடன் எல். அபுசாலி, சி.என். ஆனந்தன், கழக நிர்வாகிகள் மற்றும் காஞ்சிபுரம் நகராட்சி பொறியாளர் திரு. ஆனந்த ஜோதி அவர்கள் ஆகியோர் இருந்தனர்.
.
.
16-11-2020
காஞ்சிபுரம் நகரில் உள்ள 15 வது வட்டத்தில், தொடர்ந்து கனமழை காரணமாக மழைநீர் தேங்கி நிற்பதாகவும், அதன் காரணமாக வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் வந்த புகாரையடுத்து, உடனடியாக அங்கு சென்று மழைநீர் செல்ல வழி ஏற்படுத்த உத்தவிட்டேன். காஞ்சிபுரம் நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் JCP இயந்திரத்தின் மூலம் உடனடியாக மழை நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்கள். உடன் முருகன், முகுந்தன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்
.
.
.
16-11-2020
காஞ்சிபுரம் நகரில் 15 வது வட்டத்தில் தொடர்ந்து கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது. உடனே, அங்கு சென்று இடிபாடுகளுடன் இருந்த வீட்டை பார்வையிட்டேன். வட்டாட்சியர் அவர்களை தொடர்பு கொண்டு உடனடியாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தேன். இடிபாட்டிலிருந்து உயர்தப்பிய பெண்மணியை சந்தித்து ஆறுதல் கூறினேன். உடன் முருகன், முகுந்தன் இருந்தனர்
.
.
13-11-2020
என்னை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்த, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம். குமார், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ். சுகுமார், தாமல் ஊராட்சி செயலாளர் பி.எம்.கே. மனோகரன், எஸ். எத்திராஜ், எஸ். அறிவழகன், டி.சி.எம். பாலு, எம்.டி. இளவரசு, ஜி. கார்த்திகேயன், கே. ஜெகநாதன், எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்
.
.
.
10-11-2020
காஞ்சிபுரம் அன்னை தெரசா இல்லத்தில் உள்ள சிறப்பு குழைந்தைகளுக்கு, ரூபாய் ஒரு இலட்சம் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்களை பினோலெக்ஸ் கம்பெனி மகாலட்சுமி ஆர்டுவேஸ் சார்பில் வழங்கினேன்.
.
.
.
09-11-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அம்பி, சிறுகாவேரிப்பாக்கம், கருப்படைதட்டடை ஆகிய பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடங்கள் வழியாக பொன்னேரி ஏரிக்கு செல்லும் நீர் வரத்து லாலா கால்வாய் தூர் வாராமல் இருந்தது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களை
.
.
08-11-2020
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், பொது மக்கள் நடைபயிற்சி செல்ல தனி பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்தேன். உடன் A. சசிகுமார், T. ராம் பிரசாத், சி.கே.வி. தமிழ் செல்வன், பூ. ராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் இருந்தனர்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேக்கோண்டா போட்டியைத் துவக்கி வைத்தேன். உடன் A. சசிகுமார், T. ராம் பிரசாத் ஆகியோர் இருந்தனர்
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சிறுகாவேரிபாக்கம் ஊராட்சியின், JJ நகரில் 10-க்கும் மேற்பட்ட சாலைகள் மிகவும் சேதமடைந்து மழை நீர் தேங்கி நிற்பதை அறிந்து, அங்கு சென்று ஆய்வு செய்தேன். உடனே, வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு விரைவாக சாலைகளை சரி செய்ய பரிந்துரைத்தேன். ஆய்வின் போது காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், S.S.R. சசி அவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இருந்தனர்.
.
.
.
.
07-11-2020
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சண்முகபிரியா IPS அவர்களை சந்தித்தேன். மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. P. தியாகராஜன் MLA அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருத்தினை தவறாக திரித்து, முகநூலில் பதிவு செய்து சமூக அமைதியை குலைக்கும் வகையில் போலி செய்திகள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, காஞ்சிபுரம் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக புகார் கொடுத்தேன். உடன் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் B. கார்த்திகேயன், காஞ்சிபுரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திரு. எஸ். அரவிந்த்குமார், இளம்பருதி, பிரகாஷ், பிரசன்னா, ஜெயபால், எம். எஸ்பாலன், சு. வெங்கடேசன் ஆகியோர் இருந்தனர்.
.
.
.
06-11-2020
காஞ்சிபுரம் சரவணா& கோ புதிய கிளையை நானும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு க செல்வம் அவர்களும் இணைந்து திறந்து வைத்தோம். உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள் கலந்து கொண்டு வாழ்ந்து தெரிவித்தார்.
காஞ்சிபுரம் நகரில் 41 வது வட்டத்தில் உள்ள தாட்டிதோப்பு முருகன் குடியிருப்பு இணைக்கும் பாலம் மிகவும் சேதமடைந்து உள்ளதால் புதிய பாலம் கட்ட ஆவன செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இதனை அடுத்து காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், நகராட்சி பொறியாளர் திரு. ஆனந்த ஜோதி அவர்களும் பாலத்தின் நிலை குறித்து என்னுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்
காஞ்சிபுரம் தொகுதி பரந்தூர் கிராம மக்கள் என்னை என் அலுவலகத்தில் சந்தித்து தங்கள் ஊரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நானும் இது சம்பந்தமாக ஏற்கனவே, மாவட்ட ஆட்சியரிடம் பேசி உள்ளதையும், ஆட்சியர் அவர்களும் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் தெரிவித்ததை அவர்களிடம் தெரிவித்தேன்.
.
.
.
.
05-11-2020
அன்று சந்தித்து உடனடியாக நீர் வரத்து லாலா கால்வாய்யை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அளித்து கேட்டுக் கொண்டிருந்தேன். அதன்பேரில், உடனடியாக நீர் வரத்து லாலா கால்வாய் தூர் வாரும் பணி துவங்கப்பட்டது. தூர் வாரும் பணியை ஆய்வு செய்தேன். உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார், விஜயகுமார், தமிழ் செல்வன், விஜி, மகேந்திரன், பொதுப்பணித்துறை மற்றும் விவசாய துறை அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்
.
.
03-11-2020
தமிழ் நாடு மருத்துவ சமூக நல முடி திருத்துவோர் நல சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட புதிய கூரம் கிளையை திறந்து வைத்து, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினேன். உடன் ஒன்றிய செயலாளர் பி.எம். குமார், சேகர் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 1000 மூத்த கழக முன்னோடிகளுக்கு பெற்கிழி வழங்கும் விழாவிற்கு வருகை தந்த கழக இளந்தலைவர் இளைஞர் அணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினேன்
.
.
.
.
01-11-2020
அண்ணா அறிவாலயத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்புமிகு தலைவர் தளபதி அவர்களிடம் நிதி வழங்கினார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன்.