Gallery - 2018
23-02-2018
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி ஊராட்சியில், மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்று அவற்றை உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்
21-02-2018
காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் கலந்துக் கொண்டு மக்களிடம் குறை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்
20-02-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட பரந்தூர் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து மாணவர்களிடம் உரையாற்றினேன்
18-02-2018
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாபெரும் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தேன்
பின் மாலையில் தாமல் கிராமத்தில் விபத்து ஏற்பட்டு 9 பேர் இறந்து விட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்த செய்தி கேட்டு, உடனே மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிக்சை அளிக்க அறிவுறுத்தினேன்
10-02-2018
நீட் தேர்வு தொடர்பாக மாணவர் அமைப்புகளின் சந்திப்பு கூட்டத்தில் கலந்துக் கொண்டு ஆலோசனை வழங்கினேன்.
09-02-2018
காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2016-2017 தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6,50,000/- மதிப்பில் உயர்தர சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், ரூ.7,50,000/- மதிப்பில் மேசை நாற்காலிகள், ரூ.5,00,000/- மதிப்பில் பள்ளி சுற்றுசுவர் முதலியவற்றை திறந்து வைத்தேன்.
05-02-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீட் நுழைவு தேர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டு என் ஆதரவை தெரிவித்து, என் கருத்துக்களை தெரிவித்தேன்
03-02-2018
காஞ்சிபுரம் மாவட்டம், ஒட்டிவாக்கம் கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் தேர்வெழுதும் மாணவ / மாணவியருக்கு தேர்வுக்குரிய உபகரணங்கள் வழங்கினேன்.
01-02-2018
காஞ்சிபுரம் மாவட்டம், வேளியூர் மற்றும் வேடல் கிராமத்தில் இலவச மாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து, பின் கிராம மக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்