Gallery - 2018
30-10-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அமைந்துள்ள யமஹா மற்றும் ராயல் என்பீல்டு வாகன தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் உரிமை பறிக்கப்படுவது குறித்து நடந்த பொதுகூட்டத்தில் கலந்துக் கொண்டு ஆலோசனை வழங்கினேன்
24-10-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகரத்திலுள்ள, நாகலுத்து தெருவில் உள்ள வீட்டில் வெடி விபத்து நடந்தது குறித்த செய்தி அறிந்து, உடனே அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, தகுந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்.
19-10-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய இரயில்வே நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டேன். பின் இரயில்வே நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன கழிப்பறை வசதி அமைக்கவும், நிழற்குடை அமைப்பது குறித்தும் இரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தேன்
14-10-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 6, 7, 8, 9, 10, 19, 20, 21, 22, 23, 24 25, 28, 29, 30, 31-ஆகிய வார்டுகளில் நடந்த வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளை ஆய்வு செய்தேன்
12-10-2018
காஞ்சிபுரம் மாவட்டம், ஆரியபெரும்பாக்கம் தொகுதியில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்டு மக்களிடமிருந்து குறை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்
02-10-2018
காஞ்சிபுரம் மாவட்டம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சியில், நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொண்டு மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்.
01-10-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அதிக பயணிகள் இரயில் மூலமாக சென்னை செல்வதையடுத்து, இரயில் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் இரயில்வே இயக்குனருக்கு அளித்த மனுவின் பலனாக, காஞ்சிபுரம்-சென்னைக்கு 2 புதிய இரயில்கள் இயக்க அனுமதி கிடைத்துள்ளது. முதல் இரயில் பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தேன்