Gallery - 2018
30-11-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகரத்தில், தொண்மை நகரம் திட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை வழங்கினேன்.
காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள 5, 7, 26, 27 ஆகிய வட்டங்களில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்டு மக்களிடம் குறை மனுக்களை பெற்று அவற்றை உடனே உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்
29-11-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகரத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாம்கள் மூலம் பெறபட்ட மனுக்கள் அனைத்தையும் படித்து, துறைவாரியாக பரிந்துரை செய்யும் பணியில் ஈடுபட்டேன்
28-11-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 38வார்டில் உள்ள மலையாள தெருவில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் மின் மேர்டடார் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்
27-11-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு ஆசோசனைகளை வழங்கினேன்
அதன்பிறகு காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 28, 39, 43, 38, 44, 37 வார்டுகளில் மக்கள் குறை கேட்பு முகாமில் கலந்துக் கொண்டு மக்களிடமிருந்து மனுக்களை பெற்று தகுந்த நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்
22-11-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரத்திலுள்ள 8, 9, 10, 31, 32, 33, 34, 35, 36 வார்டுகளில் மக்கள் குறை கேட்பு முகாமில் கலந்துக் கொண்டு மக்களிடமிருந்து மனுக்களை பெற்று தகுந்த நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்.
அதில் ஒரு மனுதாரர் கேட்டுக் கொண்டதின் பேரில் மழைநீர் தேங்கி நிற்கும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மூத்த குடிமக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினேன்
20-11-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரயில்வே நிலையங்களை மேம்படுத்தி, திட்ட பணிகளை விரைவு படுத்துவது குறித்து இரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக அமைச்சரிடமிருந்து பதில் கடிதம் வந்துள்ளது.
17-11-2018
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவக் கழக மேலாளருடன், காஞ்சிபுரம் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கட்டிடம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினேன்
பின் காஞ்சிபுரம் வட்டத்தில் பெரும்பாண்மையான பகுதிகளுக்கு சென்று மக்களிடம் குறை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்
16-11-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள, ஓழைவூர் ஊராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்டு மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினேன்.
அதன்பிறகு காஞ்சிபுரம் மாமல்லன் பள்ளி அருகில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினேன்
பின் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு புதிய பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரி தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலர் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்
11-11-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகரம், பேருந்து நிலையத்தின் அருகில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினேன். பின் காஞ்சிபுரம் பழநியாண்டவர் கோவில் சார்பாக நடந்த கந்த சஷ்டி விழாவில் கலந்துக் கொண்டேன்
10-11-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள, ஏகாம்பரநாதர் கோவிலில் பழைய சிலையை வைத்து உற்சவ ஏற்பாடுகளை செய்ய, அரசு தலைமை செயலர் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி ஆகியோருக்கு கடிதம் எழுதினேன்
05-11-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்பாளையம், திருவேகம்பன் தெருவில் உள்ள நியாயவிலை கடையை ஆய்வு செய்தேன். மக்களிடமிருந்து கடை ஊழியர்கள் மீது புகார் வந்ததால் உடனே உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தேன்.