Gallery - 2018
21-12-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகரத்திலுள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க ரூ.6 லட்சம் மதிப்பில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிலையத்தை மாணவிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்
காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் கருப்படைதட்டிடை மற்றும் கோனேரிகுப்பம் ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு முகாமில் கலந்துக் கொண்டு மக்களிடமிருந்து குறை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்
20-12-2018
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம், தாமல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்டு மக்களிடமிருந்து குறை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்.
12-12-2018
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவிற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று நான் சட்ட சபையில் எழுப்பிய கோரிக்கையை அடுத்து, அங்கு ரூ.16,49,16,592 மதிப்பில் புதிய கட்டிம் கட்டும் பணியை துவக்கி வைத்தேன்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்து வந்தனர். அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்
09-12-2018
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிய நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன். பின் MRI SCAN அறை கட்டும் பணியை இன்று துவக்கி வைத்தேன்.
08-12-2018
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில் உள்ள ஆரியம்பாக்கம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கி புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தேன். பின் அதே ஊராட்சியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு மக்களிடமிருந்து குறை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்.
06-12-2018
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரத்தில் அறிஞர் அண்ணா அரங்கத்தில் BLO Officers & BLO Agents கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு ஆலோசனை வழங்கினேன்
05-12-2018
காஞ்சிபுரம் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் MRI SCAN அறை கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டேன்.
04-12-2018
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில் கோவிந்தவாடி, ஈஞ்சம்பாக்கம் மற்றும் வேளியூர் ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்டு மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்.
03-12-2018
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் துறை சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்று திறனாளிகள் முகாமில் கலந்துக் கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினேன்
காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மக்கள் குறை தீர்க்கும் முகாமில் வந்த மனுக்களை வட்டம் வாரியாக பிரித்து நகராட்சி ஆணையரிடம் கொடுத்து உடனே நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைத்தேன். பின் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவலை கடிதம் வாயிலாக மனு தாரரிடம் தெரிவிக்கவும், அதன் நகலை எனக்கு அனுப்பி வைக்கவும் கூறினேன்
01-12-2018
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் நகரத்தில் வசிக்கும் மாணவி யுவஸ்ரீ சீனாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்துக் கொண்டு இரண்டாம் பரிசு பெற்று காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்த்த மாணவியை சந்தித்து பரிசு வழங்கி பாராட்டினேன்.