Gallery - 2019
31-01-2019
காஞ்சிபுரம் தொகுதியில் கோனேரி குப்பம் ஊராட்சியில், தமிழ் நாடு அரசு கூட்டுறவு துறை சார்பில் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து புதிய பெட்ரோல் டீசல் நிலையம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
27-01-2019
காஞ்சி ஒன்றியம், சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்
26-01-2019
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கோனேரிகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற, கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்
23-01-2019
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஒன்பது அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, கைது செய்யபட்டதற்கு போராட்டம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆதரவு அளித்து நிகழ்ச்சியில் பங்குபெற்று உரையாற்றினேன்
21-01-2019
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள முத்துவேடு ஊராட்சி, தாமல் ஊராட்சி மற்றும் கிளார் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மக்களிடமிருந்து மனுக்களை பெற்று அவற்றை உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைத்தேன்.
19-01-2019
காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள 15 பள்ளிகளில், மாணவ/மாணவியருக்கு மதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிதிவண்டிகளை வழங்கினேன்.
11-01-2019
காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள அண்ணா பட்டு கூட்டுறவு சங்கங்களில் அதிக அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி காஞ்சிபுரம் இணை இயக்குநர் கைத்தறி அவர்களிடம் புகார் மனு அளித்தேன்
09-01-2019
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஏனாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற, ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றேன்