Gallery - 2019
09-03-2019
மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பில், இலவச ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் 25 ஊனமுற்ற நபர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினேன். உடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் பயனாளிகள் இருந்தனர்
08-03-2019
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், சமூக நலத் துறை சார்பில் நடைபெற்ற, தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தங்கம் வழங்கினேன்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், தமிழ் நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு இலவச கருவிகள் வழங்கினேன்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலபோகம் கிராமத்தில் புதிய சாலை போடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்
02-03-2019
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின், ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 4.5 லட்சம் மதிப்பீட்டில், புதிய ஆழ்துளை கிணறு கட்டி முடிக்கப்பட்டு, அதை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தேன்
காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள கோனேரி குப்பம் ஊராட்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 5.33 லட்சம் மதிப்பிட்டில் புதிய சிமெண்ட் சாலை, இந்திரா நகர் கோனேரி குப்பம் இணைப்பு சாலை பணி துவங்கி வைத்தேன். பின்அங்குள்ள அரியந்து அவன்யூ மக்களிடம் தொகுதி சம்பந்தமாக ஏதேனும் குறை உள்ளதா என கேட்டறிந்தேன்