Gallery - 2019
28-06-2019
அத்திவரதர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை இணை ஆணையர், போக்குவரத்து ஆணையர், தென்னக ரயில்வே மேலாளர் ஆகியோர்களை தொடர்ந்து நேரிடையாக சந்தித்து கடிதம் மூலம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறேன்.
* அத்திவரதர் திருவிழாவிற்கு ஏற்படுத்தப்படும் 4 தற்காலிக பேருந்து நிலையங்களிலும் போதிய விளக்கு வெளிச்சம் (போக்கஸ்) மூலம் ஏற்படுத்திட வேண்டும். தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து வரதராஜர் பெருமாள் கோயில் வரை சென்று வர மினி பேருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
* கோயில் மற்றும் கோயிலை சுற்றி உள்ள பகுதியில் மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் தடையில்லாத மின்சாரம் 48 நாட்களும் கிடைப்பதை, உறுதிபடுத்திட வேண்டும்.
* காஞ்சிபுரம் நகரில் உள்ள அனைத்து தெரு விளக்குகள் மற்றும் ஹைமாஸ் விளக்குகள் தடையின்றி எரியப்பட வேண்டும்.
* குடிநீரை பொறுத்தமட்டில், காஞ்சிபுரம் நகரில் தற்சமயம் போதுமான அளவில் இல்லை. அதனையும் இந்த விழாக்காலங்களில் நிறைவாக வழங்கப்பட வேண்டும். மேலும் பக்தர்களுக்கு அதிக எண்ணிக்கையில், ஆங்காங்கே சின்டெக்ஸ் டேங்குகளை நிறுவி, தண்ணீர் லாரிகள் மூலம் தொடர்ந்து நீர் நிரப்பிட வழிவகை செய்திட வேண்டும்.
* சுகாதாரத்துறை சார்பில், அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் உடன் கூடிய மருத்துவ முகாம்கள் நிறுவப்பட வேண்டும். மேலும் அருகில் உள்ள மீனாட்சி மருத்துவமனை மற்றும் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் தேவையான படுக்கைகளும், உயிர் காக்கும் மருந்துகளும் தயாராக இருப்பதோடு, துறை ரீதியான கைதேர்ந்த மருத்துவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனையிலிருந்து காஞ்சிபுரம் மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட வேண்டும்.
* உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்திட ஏதுவாக, தனி வழியோ அல்லது தனி நேரமோ ஆதார் அட்டையை பயன்படுத்தி ஏற்படுத்தி தர வேண்டும்.
* சிறப்பு ரயில் போக்குவரத்து, அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை காஞ்சிபுரம் வழியாக இரு மாரக்கமாக விடப்பட வேண்டும்
27-06-2019
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் வைபவத்தையொட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று 18.06.2019 அன்று நான் எழுதிய கடிதத்தின் பலனாக, 48 நாட்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க, போக்குவரத்துத் துறை மூலம்
பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
25-06-2019
சென்னையில் உள்ள இரயில்வே துறை முக்கிய அதிகாரிகளை சந்தித்து, இரயில் பயணிகளின் குறைகள், தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு மற்றும் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உள்ள அத்திகிரிவரதர் வைபவத்திற்கு கூடுதல் இரயில்கள் இயக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்
24-06-2019
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து, காஞ்சிபுரத்தில் ஜுலை 1ஆம் தேதி துவங்க உள்ள அத்திவரதர் திருவிழா வைபவத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும், பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டியும் கடிதம் வழங்கினேன். விழா பணிகள் குறித்தும் ஆலோசனை செய்தேன்
22-06-2019
காஞ்சிபுரம் நகரத்தில், தாமரை குலத்தை தூர் வாரும் நிகழ்வை, மண் வெட்டி எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தேன்
15-06-2019
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில், அத்தி வரதர் பெருவிழா முன்னிட்டு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு என்னுடைய ஆலோசனைகளை வழங்கினேன்
12-06-2019
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, ஜமாபந்தியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினேன். இதில் 235 நபர்கள் பயனடைந்தனர்
11-06-2019
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அத்தி வரதர் பெருவிழா முன்னிட்டு நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை வழங்கினேன்.
01-06-2019
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில், அனைத்து நிலையங்களிலும் நின்று செல்வதால் சென்னைக்கு வேலை செல்வோருக்கு அதிக நேர பயணம் ஆகின்றது. எனவே, இதனை தொடர்ந்து ரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை வைத்து அதிகவேக ரயில் பயணத்தை நடைமுறைபடுத்தினேன்.