Gallery - 2019
31-08-2019
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே 2018-2019 தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 18 லட்சம் 86 ஆயிரம் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் பெரியதாக இரண்டு மின்விசிறி மற்றும் எல்இடிகளுடன் கூடிய ஒரு பேருந்து நிழற்கொடை மற்றும் பெரியார் நகர் அருகே ஒரு பேருந்து நிழற்கொடை ஆகிய இரண்டு நிழற்கொடைகளை திறந்து வைத்தேன்.
24-08-2019
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருப்புட்குழி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 351 மாணவர்களுக்கு குறிப்பேடுகளை (நோட்புக்) வழங்கினேன்
20-08-2019
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செங்கல்பட்டு புதிய மாவட்டம் தோற்றுவித்தல் தொடர்பாக, கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், திரு. கொ. சத்தியகோபால் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு என்னுடைய கருத்துகளை தெரிவித்தேன். உடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு சிறப்பு அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
17-08-2019
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் வைபவம் நிறைவடைந்ததை தொடர்ந்து நகரத்தின் பெரும் பகுதி அசுத்தமாகி உள்ளதால் தொற்றுநோய் எதுவம் பரவாமல் தடுக்க நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர், முதன்மை செயலாளர், செயலாளர், தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் ஆகியோருக்கு கடிதம் எழுதினேன்.