Gallery - 2019
27-09-2019
காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையம் மேம்பாலம் கட்டும் பணியில், பாலத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. எனவே பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் படி முதன்மை செயலாளர் நெடுஞ்சாலை துறை அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகலை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தேன். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இருந்தார்.
26-09-2019
காஞ்சிபுரம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, சிறுவேடல் கிராமத்தில் தார்சாலை ரூபாய் 20 லட்சத்தில் அமைக்கப்பட்டது. அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.
25-09-2019
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், மழை காலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க, தொற்று நோய் பாதிக்காமல் இருக்க கால்வாய் தூர்வாறுதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்தேன். தமிழ்நாடு அரசு வருவாய் & பேரிடர் மேலாண்மை துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பல ஆலோசனைகளை வழங்கினேன்
24-09-2019
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பிள்ளையார் பாளையம் பகுதியில், கச்சபேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான குளத்தை தூர்வாரி, படிகற்கள் அமைத்து, தடுப்பு சுவர் அமைப்பது சமந்தமாக அந்த பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று, அங்கு சென்று ஆய்வு செய்த பிறகு, இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களை சந்தித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைத்தேன்
23-09-2019
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சியில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டபட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தேன்
18-09-2019
காஞ்சிபுரம் கோட்டம், சார் ஆட்சியர் அவர்களின் மனுநீதி நாள் முகாமை தொடங்கி வைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். உடன் சார் ஆட்சியர் திரு. சரவணன் IAS அவர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள், ஊர் பொதுமக்கள், பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.