Gallery - 2019
30-11-2019
காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் அவர்களிடம், புதிய பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் அமையவேண்டும் என்றும், நான் சட்டமன்றத்தில் எழுப்பி கேள்விக்கு துறை அமைச்சரும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இடத்தில்தான் பேருந்து நிலையம் அமையும் என்ற பதில் பதிவு செய்யததையும் கடிதமாக கொடுத்தேன்
21-11-2019
காஞ்சிபுரம் நகரத்தின், கிழக்கு ராஜ வீதியில் உள்ள குழந்தைகள் மையத்தில் திடிரென ஆய்வு செய்தேன். அப்போது அங்கு இருந்த குழந்தைகளின் பெற்றோர் மேற்கூறை உடைந்த நிலையில் இருப்பதை தெரிவித்ததை அடுத்து அந்த மையத்தின் புதிய கட்டிடம் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டி தரப்படும் என்று உறுதி அளித்தேன்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, 9வது வட்டத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயில் தெருவில், கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வரவில்லை என்ற புகாரை அடுத்து அங்கு சென்று, ஆய்வு செய்தேன். உடன் நகராட்சி உதவி பொறியாயர், நகராட்சி ஊழியர்களிடம் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்கும்படி உத்தரவிட்டேன்
20-11-2019
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாமல் ஊராட்சியின், தாமல் கிராம மக்கள், தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்ல சுரங்க பாதை அமைத்து தரும்படி என்னிடம் வைத்த கோரிக்கையை ஏற்று ஊர் மக்களுடன் சென்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் அவரை சந்தித்து மனு அளித்தேன்
19-11-2019
சென்னை IIT மாணவி பாத்திமா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து அறிய, அதற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி, அனைத்து மாணவர் பேரவை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தை தலைமை ஏற்று நடத்தி கண்டன உரையை தெரிவித்தேன்
13-11-2019
தினகரன் நாளிதழில், காஞ்சிபுரம் நகர்ப்புற சுகாதார நிலையம், செவிலிமேடு பகுதியில் வரும் நோயாளிகளுக்கு மாத்திரை இல்லை என்று கூறி அனுப்புவதாக வந்த செய்தியை அடுத்து ஆய்வு செய்தேன். அப்போது போதிய சர்க்கரை மாத்திரை இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் சுகாதார நிலையம் உள்ள பகுதியை தூய்மையாக உத்தரவிட்டேன். உடன் நகராட்சி அலுவலர்கள் மருத்துவர்கள் இருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட சிறுபாக்கம், ஜே.ஜே. நகர் பகுதிகளில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. அதேபோன்று கிளார் மற்றும் இலுப்பைப்பட்டு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கியும் அது அரசு பதிவேட்டில் இடம்பெறவில்லை என்றும் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன்.
12-11-2019
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 4-வது வார்டில் நீண்ட நாட்களாக சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்பாதாக வந்த புகாரை அடுத்து அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, உடனடியாக அந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த இடத்தில் நிரந்தரமாக கழிவுநீர் வெளியேற்ற புதிய வடிக்காலமைப்பு உருவாக்கி கொடுக்க உத்தரவிட்டேன்.
08-11-2019
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் 14.66 கோடி மதிப்பில் புதிதாக கட்டபட்டு வரும் கட்டிடத்தை ஆய்வு செய்து, 15 லட்சம் மதிப்பிலான நீச்சல் குளம் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தேன். மேலும், வீரர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு இடமும் தேர்வு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைத்தேன்
06-11-2019
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு அனுமதிக்கப்பட்ட உள் நோயாளிகளிடம் குறைகளை கேட்டு மருத்துவர்களிடம் தெரிவித்தேன். மேலும் மருத்துவர்களிடம் நோயாளிகளின் நலம் காக்கும் வகையில் உரிய நேரத்தில் உரிய சிக்கிச்சை அளிக்கும்படி பரிந்துரைசெய்தேன்
மாவட்ட ஆட்சியர் அவர்களிடம், பல்வேறு முகாமில் பெற்ற முதியோர் உதவித்தொகை கோரி பெற்ற மனுக்களை அளித்து உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டேன். மேலும், காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக புதிய மாணவர் விடுதி கட்டுவதற்கான இடம் சம்பந்தமாக ஆலோசனை வழங்கினேன்.
05-11-2019
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம், கீழ்கதிர்பூர் ஊராட்சியில் உள்ள மக்களின் பட்டா சம்பந்தமான பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினேன்
02-11-2019
காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கீழ் கதிற்பூர் ஊராட்சியில் இருந்து வந்த பொது மக்கள் என்னை சந்தித்து அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு பட்டா சம்பந்தமாக பிரச்சினை உள்ளது குறித்து தெரிவித்தார்கள். எனவே இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் பேசி உரிய தீர்வு காண வழிவகை செய்கிறேன் என்று உறுதி அளித்தேன்.
01-11-2019
காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள சன்முகா நகர், இந்திரா நகர், கன்னியப்பன் நகர், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் சரியில்லை என்று அந்த பகுதி மக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து, அங்கு ஆய்வு ஆய்வு மேற்கொண்டேன். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், கிராமநிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆய்வின் போது உடன் இருந்தனர்