Gallery - 2019
31-12-2019
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, LPF, CITU, INTUC, AITUC, HMS, NFPE முதலிய மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து 8-1-2020 அன்று ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்த மாநாடு குறித்து, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினேன்
18-12-2019
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள தாமல் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினேன்
17-12-2019
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பல்லவர் மேடு பகுதியில் நகராட்சி சமுதாய கூட்டத்தை புதுப்பித்து தரும் படியும், இரண்டு பள்ளிகள் அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறித்தும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கடிதம் கொடுத்தேன்.
04-12-2019
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கருப்படிதட்டை ஊராட்சி, பருத்திக்குளம் கிராமத்தில் வசிக்கும் பல குடும்பங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இல்லாமல் வசித்து வருகின்றனர். அவர்கள் இலவச பட்டா வழங்க வேண்டி அளித்த மனுக்களை எல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் ஓப்படைத்து அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு பரிந்துரை செய்தேன்